ஆம்னி பேருந்து கட்டணம் ஏழை எளிய மக்களை பாதிக்கவில்லை என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என புகார் எழுப்பப்பட்டது. இதனால் சென்னை எழிலகத்தில் அமைந்திருக்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்துடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து பேசி பேச்சுவார்த்தை நடத்தினார்.
“திமுக கட்சிக்காரர்கள் மணல் அள்ளட்டும் ….” – திமுக எம்பி ராஜேஷ்குமார் பேசிய சர்ச்சை வீடியோ லீக்

அந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு பேசிய அவர் “அரசு பேருந்து கட்டணத்துடன் ஆம்னி பேருந்து கட்டணத்தை ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம். ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழை எளிய மக்களை பாதிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர் “தனியார் பேருந்து கட்டணம் அதிகம் என்று தெரிந்துதான் மக்கள் புக் செய்கிறார்கள் அதனால் அவர்கள் யாரும் புகார் தெரிவிக்கவில்லை” என்றும் கூறியுள்ளார். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்.
