தஞ்சாவூர் திமுக எம்.எல்.ஏ வீட்டில் நடந்த விழாவில் மொய்ப்பணம் மட்டும் பத்து கோடி ரூபாய்க்கு வசூல் ஆனது அரசியல் வட்டாரத்தில் பூதாகரமாக வெடித்து இருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இந்த மொய் விருந்து என்பது விமர்சையாக நடைபெறும் சுமார் 100 ஆண்டுகளாக இந்த பாரம்பரியத்தை அவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். அப்போதெல்லாம் மொய் பணத்திற்கு ஏற்றார் போல விருந்து பரிமாறப்பட்டது. ஆனால் தற்போது மொய் விருந்து என்றாலே கிடா வெட்டி கறி குழம்பு சமைத்து அசைவ உணவை சுவைப்பது என்றாகிவிட்டது.
கஷ்டத்தில் இருக்கும் உறவினர்களுக்கு கை கொடுத்து தூக்கவும், பொருளாதார ரீதியாக அவர்களுக்கு உதவி செய்யவும் இந்த மொய் விருந்து எனப்படும் கலாச்சாரம் தொடங்கியது. ஒரு நபர் மொய் கொடுத்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தான் அடுத்த மொய் கொடுக்க வேண்டும். மொய் செலுத்தியவர் மொய் விருந்து நடத்தும்போது இதற்கு முன்பு கொடுத்தவர்களை விட கூடுதலாக திருப்பித் தர வேண்டும் எந்த நடைமுறையும் அவர்கள் பின்பற்றி வந்தனர்.
Viral Video | குரான் வாசகங்களை கூறிக்கொண்டு அமைச்சரை கத்தியால் குத்த முயன்ற நபர் | வீடியோ வைரல்

மேலும் இது பல கருப்பு பணங்களை வெள்ளையாக மாற்றவும் வசதியாக இருக்கிறது என சிலர் கூறுகின்றனர். இந்த ஒரு சூழ்நிலையில்தான் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதி திமுக எம்எல்ஏ அசோக்குமார் பேரன் காதணி விழாவிற்கு மொய் விருந்து விழாவில் 100 கிடா 1300 கிலோ கறி மட்டன் குழம்பு குடல் கூட்டு என அசைவத்தில் இருக்கும் பல உணவுகளை சுமார் 200 க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்களை வைத்து சமைத்து உணவு பரிமாறினார்.
மேலும் சைவ உணவை சாப்பிடுபவர்களுக்கு தனியாகவும் ஒரு சாப்பிடும் முறை வைக்கப்பட்டது. அந்த விழாவிற்கு துப்பாக்கி ஏந்திய செக்யூரிட்டிகள் பாதுகாப்பு, பத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் கொண்டு மிகவும் கண்காணிப்போடு அந்த விழா நடைபெற்றது. சுமார் 40 கவுண்டர்கள் அமைத்து இந்த விழாவுக்கு மொய் பணம் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது.
