“தனது கட்சிக்காரர்கள் மணல் அல்லட்டும் என சொன்னவன் நான்தான்” என்று திமுக எம்பி ராஜேஷ் குமார் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்து வருபவர் தான் ராஜேஷ் குமார். மேலும் திமுக மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவியில் இருந்து வருகிறார். திமுகவில் உட்கட்சி பூசல் நடந்து கொண்டு வருவதால் நாமக்கல் மாவட்டம் இரண்டாக பிரிந்து கிழக்கு மேற்கு என செயல்பட்டு வருகிறது.

அதில் கிழக்கு மாவட்ட திமுகவில் மீண்டும் ராஜேஷ்குமார் தான் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஏனென்றால் இவரது கட்டுப்பாட்டுக்கு கீழ்தான் திமுக வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும் கட்சியினரை அரவணைத்து செல்வதில் இவர் கைதேர்ந்தவர். மேலும் மேலிட சிபாரிசும் இருப்பதால் இவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் கூட செய்யவில்லை என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் தான் இவர் பேசிய ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் “மணல் அள்ளக்கூடாது என்று கேபி ராமசாமி நிறுத்திவிட்டார், எந்த மாவட்டத்திலும் எந்த மாவட்ட செயலாளரும் இப்படி கூப்பிட்டு மணல் அள்ளுங்க என சொன்னதே கிடையாது. நான் ஒருத்தன் தான் அப்படி சொன்னேன். மீதி எல்லாம் அந்த கம்பெனிக்காரன் கிட்ட கொடுத்துட்டு பணம் வாங்கிட்டு போகிறார். நான் ஒருத்தன் தான் கட்சிக்காரங்க எல்லாம் சேர்ந்து செய்யுங்க என்று கட்சிக்காரங்க கையில இத கொடுத்தேன்” என்று இப்படியாக பேசியுள்ளார். தற்போது இவர் பேசிய இந்த வீடியோ பரபரப்பாக இணையத்தில் பரவி வருகிறது.
சமூக வலைதளங்களில் பரவும் திமுக எம்பி ராஜேஷ்குமார் பேசிய வீடியோ #DMK @ZeeTamilNews @SathishPT123 @sureshzeetamil pic.twitter.com/kSbkHWooiR
— Anumanth_raj (@Anumanth_raja) September 27, 2022