
ஊரக உள்ளாட்சித்தேர்தல் பணிகள் அனைத்து கட்சி தலைவர்களும் மக்களை சந்தித்து ஓட்டு கேட்பது வழக்கம் ஆனால் கோரோன காலம் என்பதால் அதற்கு இப்போது அனுமதி இல்லை என்பதால் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அனைத்து மக்களையும் இணையவழி மூலமாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்… சேலம் , கடலூர் என பல மாவட்டங்களில் மக்களை இணைய வழியாக சந்தித்து வாக்கு கேட்டு வருகிறார் அண்மையில் கன்னியாகுமாரி மாவட்ட மக்களை இணைய வழியில் சந்தித்த முதல்வர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களை விமர்சித்தார் அப்போது நீட் தேர்வு அதிமுக ஆட்சி காலகட்டத்தில் தான் வந்தது என்றும் , தொடர்ந்து பல பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றினார் எடப்பாடி பழனிசாமி என்றும் அவரை பச்சை பொய் பழனிசாமி என பெயரிட்டு கடுமையாக விமர்சனம் செய்தார்… எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்தார் முதல்வர் ஸ்டாலின் நீட் கொண்டுவந்தது அதிமுக ஆட்சியில் தான் என்று நான் நிரூபணம் செய்வேன் சாட்சிகளுடன் சவாலுக்கு எடப்பாடி பழனிசாமி தயாரா என பேசியிருந்தார் .

ஸ்டாலின் சவாலை ஏற்ற எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன
தொடர்ந்து பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றிவரும் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு தரலாம் என்றும் ஸ்டாலினுடைய மகன் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை ஒழிக்க தன்னிடம் ரகசியம் உள்ளதாகவும் அந்த ரகசியம் நீட் தேர்வு ஒழிப்பு என்றும் இந்த ரகசியத்தை கூறிய உதயநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கவேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி மேடையில் கூறியிருந்தார்… ஸ்டாலின் அவர்கள் எனக்கு விடுத்த சவாலை நான் ஏற்கிறேன் என்றும் அந்த சவாளில் நானும் பன்னிர்செல்வம் அவர்களும் கலந்துகொள்வோம் என்றும் கூறியிருந்தார் இடம் , நேரம் குறிப்பிட்டு சொன்னால் முதல் ஆளாக கலந்துகொள்வேன் என்று கூறினார் இந்த சவாலுக்கு மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள் என்று ஆவேசமாக கூறினார் எடப்படிபழனிசாமி பல பொய்களை சொல்லி மக்களை 8 மாதங்களாக ஏமாற்றிவரும் திமுக , காங்கிரஸ் தான் நீட் தேர்வு கொண்டுவந்தது என்று பேசினார் தேர்தல் பிரச்சாரத்தில்.