அமெரிக்கப் பெண் ஒருவர் உடலில் இருந்து 3 ஒட்டுண்ணிகளை இந்திய மருத்துவர்கள் கண்டுபிடித்து அகற்றியுள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தனது கண்களில் பாதிப்பு ஏற்பட்டதை அவர் கண்டுள்ளார். அடிக்கடி கண் சிவந்து போவது, கண் அரிப்பு போன்ற சிக்கல்களில் அவர் இருந்துள்ளார். இது கண்ணில் மட்டுமல்ல அவரது கை, கால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அமெரிக்க மருத்துவமனையிலேயே சிகிச்சை பெறலாம் என நினைத்தார், ஆனால் எந்த மருத்துவர்களும் இது ஓவ்வாமை என கூறி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவர் தற்போது இந்தியாவிற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார்.
அப்படி இந்தியாவுக்கு வரும்போது அந்த கண் அரிப்பு அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் டெல்லியில் உள்ள அவரது நண்பர்கள் சிலர் அவர்களை டெல்லி மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றனர். அந்த மருத்துவர்கள் அவரது உடலில் ஏதோ ஒன்று அசைவதாக பரிசோதனையில் கண்டுள்ளனர் அவரது உடலை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் 3 ஒற்றுண்ணிகள் இருப்பதை டெல்லி மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தப் பெண் சிறிது மாதங்களுக்கு முன்பு அமேசான் காடுகளுக்கு சென்றுள்ளார், அங்கு ஒட்டுண்ணி ஆனா மனித பூச்சி அவரது உடலுக்குள் ஊடுருவி உள்ளது. நமக்கே தெரியாமல் நம்முடைய உடலுக்குள் புகுந்து ஊடுருவும் தன்மை படைத்தது தான் இந்த ஒட்டுண்ணி. அதன்படி அந்த பெண்ணின் கண், முதுகு, கை, கால் என அந்த ஒட்டுண்ணி நுழைந்துள்ளது. இது தெரியாமல் இருந்த அந்தப் பெண் ஒட்டுண்ணியுடன் வாழ தொடங்கியுள்ளார் அப்போது அந்த பெண்ணுக்கு வித்தியாசமான உணர்வுகளும் ஏற்பட்டுள்ளது.
தற்போது ஒட்டுண்ணியை கண்டுபிடித்த மருத்துவர்கள் அவற்றை அகற்றி உள்ளனர். இந்த ஒட்டுண்ணியால் பிரச்சனைகளை சந்தித்த அமெரிக்க பெண் இப்போது நிம்மதியாக வீடு திரும்பியுள்ளார். இதை கவனிக்காமல் விட்டால் மனித திசுக்களில் இது ஊடுருவி மூளைக்காய்ச்சல் போன்ற பெரிய சிக்கலையும் ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.