பிறர் கண்களை பார்த்து பேசினால் கர்மா Transfer ஆகுமா..கண்களைப் பார்த்துப் பேசுவதால் கர்மா (transfer ஆகுமா). கர்மா என்பது என்ன செயல்கள், எண்ணங்கள், மற்றும் வார்த்தைகளால் உருவாகிறதா. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாக மாறுகிறதா என்று பார்க்கலாம்.
ஆன்மீகத்தில் கர்மா
கர்மா என்பது வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது. ஒருவருடைய நல்லது கெட்டது அனைத்தும் அவருடைய சொந்த செயல்களால் மட்டுமே ஏற்படும் என்று சாஸ்திரம் சொல்கிறது ஆதலால் ஒருவர் நல்ல செயல்களை செய்யவேண்டும் நல்லவற்றை பேசவேண்டும் நல்லவற்றை பார்க்கவேண்டும் நல்லவற்றை கேட்கவேண்டும் நல்லவற்றை நுகரவேண்டு என்று சொல்லப்படுகிறது. உடனே ஒரு கேள்வி எழும் தவறுதலாக பார்த்துவிட்டால் அல்லது கேட்டுவிட்டால் என்று அது மனதில் பதியாதவாறு நீங்க அதை கையாள வேண்டும்.
அதனால் நீங்கள் பாதிக்கப்படுவோமோ என்று என்ன கூடாது, ஒரு நிமிடம் இறைவனை நினைத்து கடந்து செல்லுங்கள் அதற்காக வேணுமென்றே தெரிந்து திரும்ப திரும்ப செய்யகளை செய்வது தவறு நல்ல நண்பர்கள் பழக்கம் வைத்துக்கொள்ளுங்கள் உங்கள் மனது எதை செய்தால் நிம்மதியடைகிறது என்று தேடுங்கள் முக்கியமாக அராபாத்தில் உங்கள் மனது தீயசெய்யலில் தான் நிம்மதி என்று உங்களை உணரச்செய்யும் எடுத்துக்காட்டு குடிப்பழக்கம் இருப்பவர் தினமும் குடித்தால் நிம்மதி என்று சொல்லுவார் இப்படி பலர் உண்டு ஆனால் இது உண்மையான நிம்மதி இல்ல நீங்கள் உங்களின் மனதிற்கு எதை அறிமுகப்படுத்துகிறீர்கள் என்பதை பொறுத்து தான் உங்கள் மனது காலியாக இருக்கும் இடம் அதில் நீங்கள் கழிவுகளை கொட்டினால் கழிவுகள் தான் தேங்கி நிற்கும் அதுவே எங்கே நல்ல மரங்களை நட்டால் அல்லது ஒரு வீடுகட்டினால் குடுப்பதுடன் சந்தோசம் கிடைக்கும் மனது ஆறுதலடையும் விரைவில் கர்மாவை அழிக்கும் ஆற்றலை உருவாக்கலாம்.
ஆனால் ஒரு சிலர் குடிப்பது, பெண், பொன், மண் என பல ஆசைகள் இது நிறைவேறினால் என் மனது நிம்மதி என்று சொல்வது தவறு உங்களின் மனதை அடக்கி அதற்க்கு நல்லவற்றை அறிமுகம் செய்யுங்கள் குடிப்பழக்கம் மாற்று என்ன எதை செய்தால் நமது மனம் உண்மையில் நிம்மதியடையும் என்று தேடுங்கள் நீங்கள் யார் என்பதை தேடுங்கள் ஏன் கர்மாவில் சிக்கியுள்ளோம் என்பதை தேடுங்கள் கடினமா வழி நிரந்தர தீர்வு கிடைக்கும். எளிதான (சொகுசு) வழி என்றோ ஒருநாள் படுகுழியில் தள்ளும்.
கண்களைப் பார்ப்பது கர்மா பரிமாற்றம் ஆகுமா :
கண்களைப் பார்த்துப் பேசுவது என்பது இரண்டு நபர்களுக்கு இடையே ஒரு ஆழமான தொடர்பை உருவாக்குகிறது. ஒருவரின் உணர்வுகளையும், எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் கண்களின் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடியும். இது ஒருவருடைய ஆற்றல் பரிமாற்றத்திற்கு (energy exchange) வழிவகுக்கும், ஆனால் இது கர்மாவைப் பரிமாறாது.
உதாரணமாக: ஒரு கோபமான நபரைக் கண் பார்த்தால், நீங்கள் கோபமாக உணரலாம். இது ஒரு ஆற்றல் பரிமாற்றம். ஆனால், அவருடைய கோபத்தால் ஏற்பட்ட கர்மா உங்களுக்கு மாறாது.
ஒருவரின் வெறுமனே பார்ப்பதால் உங்களின் பலம் வேண்டுமானால் வெகுவாக அதாவது உங்களின் கட்டுப்பாடு எதிரநபருக்கு மாறலாம் அதுவும் சிறிது நேரமே தவிர முழுமை இல்லை, பார்ப்பதால் கர்மா பரிமாற்றம் அடையாது ஆனாலும் உங்களின் மனம் அதை எப்படி எடுத்துகொள்ளுது என்பதை பொறுத்தே கர்மா முக்கியமாக ஒன்றை பார்த்தால் அது மனதில் பதிந்தால் அதை அடையவேண்டும் என்றோ அல்லது அதை பற்றி சிந்திக்கவிக்கும் போக்கு அதை செயலக மாற்றும்போது கர்மா வரும் என்றே சொல்லலாம் இதிலும் முக்கியமாக செயல் தான் உள்ளது நல்ல செயலை செய்யுங்கள்,
எவற்றை கொண்டு கர்மா அழியும் குறைப்பது
- சரணாகதி (கிருஷ்ணரிடம்)
- நல்ல செயல்
- நல்ல வார்த்தைகள்
- நேர்மை
- கருணை
- பக்தி
- தர்மம்
- புலன்களை அடக்குதல்
சாதாரண ஆன்மீக பார்வை:
ஒருவரின் கண்களை பார்த்து மற்றொருவர் பேசுவது கர்மா நேரடியாக பரிமாறிக்கொள்ளும் (transfer) என்ற கருத்து எந்த சாஸ்திரங்களிலும் இல்லை. கர்மா என்பது ஒவ்வொருவரின் சொந்த எண்ணங்கள், சொற்கள், செயல்களின் பலனாக உருவாகிறது. அது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு “மாறுவதில்லை”.
பிறர் கண்களை பார்த்து பேசினால் கர்மா Transfer ஆகுமா
- கண்கள் “மனதின் கண்ணாடி” எனக் கூறப்படுகிறது. ஒருவர் கண்களை பார்த்து பேசும் போது அவரின் உள்ளுணர்வு, உணர்ச்சி, அதிர்வுகள் (vibrations) மற்றவருக்கு மிகவும் ஆழமாகப் பதியும்.
- இந்த அதிர்வுகள் மூலம் நாமும் நேர்மறை (positive) அல்லது எதிர்மறை (negative) தாக்கங்களை அனுபவிக்கலாம். (உதாரணம்: கருணையுள்ள சந்நிதி, கோபமுள்ள பார்வை).
- ஆனால் இது கர்மா பரிமாற்றம் அல்ல, அனுபவ பரிமாற்றம் மட்டுமே.
சாஸ்திரக் கருத்து:
- கர்மா எப்போதும் தனிப்பட்டது. பகவத் கீதையிலும், உபநிஷத்துகளிலும், “ஒருவர் செய்த கர்மா அவருக்கே” என்று சொல்லப்படுகிறது.
- ஆனால் சகாப்த புண்ணியம் (shared punya) இருக்கலாம். உதாரணமாக, சத்சங்கத்தில் இருப்பதால் நமக்கு ஆன்மீக முன்னேற்றம் கிடைக்கலாம். ஆனால் அது அவர்களின் கர்மா எங்களுக்கு மாறிவிட்டது என்பதல்ல.
கண்களை பார்த்து பேசுவதால் கர்மா பரிமாறும் என்பது முக்கியமல்ல செயல் தான் முக்கியம் நல்ல செயல்கள் மன தூய்மை இறைவனிடம் சரணாகதி இறைபக்தி வேண்டும்.
கண் திருஷ்டி எப்படி வேலை செய்கிறது
கண் திருஷ்டி என்பது ஒருவரின் வளர்ச்சி அல்லது அவரிடம் இருக்கு வளங்கள் செல்வம் சொகுசு அழகு என பல்வேறு உள்ளன அது ஒரு சிலர் அறியாமையால் சூப்பரா இருக்கிறாரே என்று சொல்வது, எப்படி திடீரென பணக்காரன் ஆனான் எப்படி வண்டி வகித்தான் வீடு கட்டிட்டான் என பல வகையான உங்களை திருஷ்டி வைப்பார்கள் அது உங்களை விழச்செய்யாது மற்றும் உங்களின் வெற்றியை இலக்கை எந்தவகையிலும் பாதிக்க செய்து இருப்பினும் தாமதம் செய்யும் ஒரு கண் திருஷ்டி நிலைகுலைய செய்யும் தாமதம் ஏற்படுத்தும் ஒருசிலரின் சக்தி (மனநிலை) பொறுத்து அமையும் கல் அடிபடலாம் கண் அடி படக்கூடாது சொல்லுவார்கள் ஆகையால் திருஷ்டி கழித்தல் அவசியம் குளிக்கும்போது உப்பு மஞ்சள் 2 ஸ்பூன் எடுத்து குளிக்கும் நீரில் கலந்து குளித்தால் திருஷ்டி கழியும் இல்லையென்ற (எலுமிச்சை,பூசணி காய்) வைத்து திருஷ்டி சுத்துதல், உப்பு மிளகாய் வைத்து திருஷ்டி சுத்துதல் போன்றவை எதிர்மறை தாக்கங்களிலிருந்து உங்களை காப்பாற்றும். திருஷ்டி உங்களை அதிகளவில் தகமலிருக்க நீங்கள் பிறருக்கு திருஷ்டி வைப்பது நிறுத்தவேண்டும், தூயமனம் பிறருக்கு உதவும் பங்கு கருணை தர்மம் பக்தி பணிவு ஒழுக்கம் நேர்மை,சரணாகதி இருப்பவரிடம் திருஷ்டி மட்டுமில்லை வேறுஎதுவும் உங்களை அண்டாது என்பதே கருத்து
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்