உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் லிப்டுக்குள் சிறுவனை நாய் கடித்த நிலையில் நாயின் உரிமையாளர் இதனை கண்டும் காணாமல் இருந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
உத்திப்பிரதேச மாநிலம் காசியப்பதில் இந்த சம்பவமானது நடைபெற்று இருக்கிறது. அதாவது முதலில் அந்தப் பெண்மணி (அந்த நாயின் உரிமையாளர்) முதலில் அந்த லிப்டுக்குள் செல்கிறார். அதற்குப் பிறகு அந்த குழந்தையானது சென்றிருக்கிறது. சில நிமிடங்களில் அந்த நாயானது அந்த குழந்தையின் தொடையில் கடித்து இருக்கிறது. அந்த குழந்தை கதவை திறந்து லிப்டில் இருந்து வெளியேறுவதற்காக முயற்சியில் அந்த குழந்தையை ஈடுபட்டு வருகிறது.
Viral Video | படையப்பா ரஜினி ஸ்டைலில் ரோட்டோரத்தில் தாத்தா பிடி பிடிக்கும் காட்சி | இணையத்தில் வைரல்

ஆனால் அந்த நாயின் உரிமையாளர் அந்த குழந்தையை வந்து காப்பாற்றும் முயற்சியில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு பிறகு லிப்ட் திறந்த பிறகு மறுபடியும் அந்த நாயானது அந்த குழந்தையை கடிக்கவருகிறது. அப்போது கூட அந்த நாயின் உரிமையாளர் எந்த ஒரு கரிசனம் காட்டாமல் அந்த நாயை எடுத்துகொண்டு வெளியே சென்றார். அந்த குழந்தையின் அப்பா இதுகுறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தும் தற்போது அந்த நாயின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அந்த லிஸ்டில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த நாயின் உரிமையாளரை இணையவாசிகள் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.
गाजियाबाद में एक लिफ्ट में कुत्ते को काट लिए। बच्चा दर्द में था फिर भी महिला का दिल नहीं पिघला।
— Aanchal Dubey (@AanchalDubey21) September 6, 2022
इसको कहते हैं एक तो चोरी ऊपर से सीनाजोरी। #Ghaziabad #Dogbite #Viral pic.twitter.com/Z9mMritXMB