நடிகை ஷீலா மற்றும் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் திரௌபதி. இந்த படம் வசூல் ரீதியாக மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படம் போஸ் ஆஃபிஸில் நல்ல வெற்றி அடைந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து இந்த இயக்குனர் ருத்ர தாண்டவம் என்னும் படத்தை இயக்கினார் அந்த படமும் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் இந்த இரண்டு படமும் ஒரு சாராரை மட்டுமே கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

அதனால் இந்த படத்திற்கு சினிமா ரசிகர்களும் நல்ல வரவேற்பை தரவில்லை. ஆனாலும் இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிசில் வெற்றி பெற்றது. தற்போது திரௌபதி படத்தில் நடித்த ஷீலாவிடம் நீங்கள் இந்த படத்தில் நடித்தது தொடர்பாக ஏதேனும் கூற வேண்டும் என்று கேட்டதற்கு அந்த படம் நடித்தது எனக்கு ஒரு கெட்ட கனவு என கூரியிருக்கிறார். திரௌபதி ஒரு சமூகம் சார்ந்த படமா இந்த படத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என கேட்டதற்கு பதில் அளித்தார். அப்போது பேசிய ஷீலா :- “இப்ப வரைக்கும் அந்த படத்துல நடிச்சது எனக்கு கெட்ட கனவா தான் இருக்கு. ஏன்னா எனக்கு முழு கதையும் சொல்லப்படவில்லை. என்னோடு ரோல் என்னவோ அதை மட்டும் தான் சொன்னாங்க. அன்றைய தினத்தில் முடிவு என் கையில் இருந்த போது நான் அதை தைரியமாக எடுத்தேன்.
பொதுவாகவே எனக்கு அரசியல் தெரியாது அதுதான் உண்மை. என்னுடைய வேலையை சரியாக பண்ண வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் அந்த படத்தில் நடிக்க வேண்டி இருந்தது. ஆனா இவங்களுக்கு பிடிச்சிருக்கு அவங்களுக்கு பிடிக்கல அப்படின்னு சொல்ற எல்லா விஷயத்தையும் நான் பின்னால தான் தெரிந்து கொண்டேன். சமூகத்தில் இப்படி ஒரு நிலைமை இருப்பதே எனக்கு தெரியாது. நான் வளர்ந்த விதம் அப்படி. ஹாஸ்டலில் இருந்த போது என்னுடன் படித்த பெண்களின் பின்னணி வைத்து தெரிந்து கொண்டு நான் பேசியதில்லை. அதனால் எனக்கு இது புது விதமாக இருந்தது. ஒரு டைம் தடுக்க விழுந்துட்டேன். அதிலிருந்து எப்படியாவது வெளிய வந்து நல்ல விஷயங்களை பண்ண வேண்டும் என்று நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.
