விஜய் டிவியில் இரண்டு சீசன்கலை தொடர்ந்து தற்போது 3வது சீனாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. இதில் முன்னதாக சிவாங்கி, அஸ்வின், பாலா, புகழ் போன்ற பலர் இருந்தனர். அந்த சமயத்தில் இந்த ஷோ வேகமாக சூடுபிடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இப்போது சீசன் 3 தொடங்கியிருக்கின்றனர். முந்தைய சீன்களில் மிகவும் எல்லோருக்கும் பிடித்துப் போன புகழ் இந்த மூன்றாவது சீசனில் இல்லை என்ற செய்தியை அறிந்ததும் பல ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக சீசன் 3 ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. தற்போது அடுத்த வாரம் வரும் எபிசோடுகாண புரோமோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த ப்ரோமோவில் ஹே சினாமிகா படத்தின் பிரமோஷனுக்காக துல்கர் சல்மான் மற்றும் அதித்தி ராவ் ஹைதரி விஜய் டிவி குக் வித் கோமாளி ஷோவிற்கு கெஸ்டாக வந்துள்ளனர். அந்த சமயத்தில் துல்கர் சல்மான் புல்லட் வண்டியை சேட்டிற்குள் எடுத்து வந்து அதில் சிவாங்கி அவர்களை உட்கார வைத்து ஒரு ரவுண்டு அடித்தார். இதை பார்த்த போது ஓகே கண்மணி படத்தில் துல்கர் சல்மான் நித்யா மேனனை பின்னாடி வைத்து பைக் ஓட்டுவது போல இதுவும் இருந்தது என வித் கோமாளி ரசிகர்கள் கூறி வருகின்றனர். எனவே இந்த புரோமோ பார்த்ததும் ரசிகர்கள் மத்தியில் அடுத்த எபிசோடு எப்போது வருமென காத்திருப்பு இப்போதே தொடங்கிவிட்டது.
😍😍 #CookWithComali Season 3 – வரும் சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #CWC #VijayTelevision pic.twitter.com/9APexVOTNT
— Vijay Television (@vijaytelevision) March 10, 2022
Eeee🙈 thankyou @dulQuer for being a sport. Thankyou for your encouragement, and always a fan of your character and humility! My best fangirl moment🙈 pic.twitter.com/32rONn7dxT
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) March 10, 2022