“நான் எத்தனை வயசு வரை உயிர் வாழ்வேன் என தெரியவில்லை… தம்பி ஸ்டாலின் நீ நல்லா இருக்கனும்” | பேரவையில் கண் கலங்கிய துரைமுருகன்

திமுக அரசு ஆட்சிக்கு வந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்று இருக்கும் நிலையில் 110 விதியின் கீழ் பல திட்டங்களை இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார். அதன் பின்னர் பேரவையில் அதிமுகவை தவிர்த்து பிற கட்சி தலைவர்கள் அனைவரும் திமுக அரசின் ஓராண்டு சாதனையை பாராட்டி பேசினர். அப்போது பேசிய துரைமுருகன் அவர்கள் ஸ்டாலின் கடந்த ஓராண்டு காலத்தில் செய்த சாதனையை நினைவூட்டி கண் கலங்கினார்.

https://kingwoodsnews.com/politics/stalin-new-plans/

அப்போது பேசிய திரு துரை முருகன் அவர்கள் :- “அப்பாவையே தோற்கடித்த ஒரு மகனாக முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார், எங்களோடு கலந்து பேசி இருந்தாலும் நாங்கள் அவருக்கு சரியான ஒரு அறிவுரையை குறி இருப்போமா என தெரியவில்லை. அவர் தனி ஒருவராக சிந்தித்து பல திட்டங்களைத் தீட்டி அவற்றைச் செயல்படுத்துவதில் வல்லவராக இருந்துள்ளார். தண்ணீர் வர வர ஏரி, குளங்கள் நிரம்பி விடும், ஆனால் எவ்வளவு தண்ணீர் வந்தாலும் கடல் மட்டும் அதை ஏற்றுக்கொள்ளும்.

அப்படி கடல் போல திட்டங்களை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். முதலமைச்சரை பிடிக்காதவர்கள் யாருமே கிடையாது. காரில் சென்றாலும் எந்த ஒரு தனிமனிதர் ரோட்டோரத்தில் மனு கொடுக்க நின்றாலும் அந்த தனிமனிதனிடம் சென்று மனுவை பெரும் மகத்தான குணத்தை கொண்டிருக்கிறார். ஓடாத தேரையே ஓட வைத்தவர் கலைஞர், செயல்படாத கவர்னரையே செயல்பட வைத்தவர் முதலமைச்சர்.

திராவிட இயக்கத்தை காப்பாற்றும் ஒரு ஆண்மகனாக நீங்கள் பிறந்திருப்பதால் எனக்கு மகிழ்ச்சி. நான் இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்வேன் என்று தெரியவில்லை, ஆனால் நான் வாழும் நாட்களை நீங்கள் எடுத்துக் கொண்டு, என் தம்பி ஸ்டாலின் இன்னும் பல ஆண்டுகள் வாழவேண்டும்” என்று மிகவும் உருக்கமாக பேசினார். அவர் பேசுகையில் இடையில் குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு அவர்கள் :- “எல்லோருடைய வாழ்த்துக்களுடனும் நோய் நொடி இல்லாமல் நீங்கள் நூறு ஆண்டுகள் வரை இருப்பீர்கள்” என அவரை பார்த்து கூறினார்.

Spread the love

Related Posts

அதிமுக, அமமுக இணையுமா ?? டி.டி.வி தினகரன் பதில் என்ன ??

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்தையடுத்து, அக்கட்சியினர் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்

உடைந்த பாஜக கூட்டணி? அதிருப்தியில் அண்ணாமலை, மெகா கூட்டணி எடப்பாடி எந்தக்கட்சிகளை குறிவைத்துளார் தெரியுமா ?

அமிட்ஷாவை சந்திக்கவேண்டிய அவசியம் இல்லை என்று அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி இருப்பது

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி கேரளா போலீசாரால் அதிரடி கைது | விவரம் என்ன ?

மலையாளத்தில் வளர்ந்து வரும் ஒரு பிரபல நடிகரான ஸ்ரீநாத் பாசி பெண் நிருபரை ஆபாசமாக திட்டிய