வேலூரில் மகளிர் நியாய விலை கடை திறந்து வைத்துப் பேசிய துரைமுருகன் அவர்கள் “உழைப்பு இருந்தால் யார் வேண்டுமானாலும் முன்னுக்கு வரலாம் என பிரதமர் மோடியை முன்னுதாரணம் காட்டி பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஷேன்பாக்கத்தில் மகளிர் நியாயவிலை கடையை திறந்து வைத்துப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் உழைப்பால் யார் வேண்டுமானாலும் முன்னுக்கு வரலாம் என்பதற்கு பிரதமர் மோடியை உதாரணமாக கூறினார். டீக்கடை வைத்துக் கொண்டிருந்தவர் இன்று இந்தியாவின் பிரதமராக ஆகியிருக்கிறார், அதேபோல உழைப்பு இருந்தால் யார் வேண்டுமானாலும் திமுகவிலும் முன்னுக்கு வரலாம் அதனால் எப்போதுமே உழைப்பதை மட்டுமே உயர்வாக கருத வேண்டும் அந்த உழைப்பு உண்மையானதாக இருக்க வேண்டும் என்றார்.
மேலும் பேசிய அவர் திமுக ஆட்சி காலத்தில் விவசாயிகள் ஏரிகளில் வண்டல் மண்ணை அள்ளுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து மார் தட்டினார் துரைமுருகன். உழைப்புக்கு உதாரணமாக பிரதமர் மோடியை முன்னுதாரணமாக காட்டி துரைமுருகன் பேசிய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது..
