இயர்போன் மற்றும் ப்ளூடூத் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் இன்றைய தலைமுறை ஆடியோ சாதனங்களில் இயர்போனும் ப்ளூடூத்தும் ஒரு அங்கமாகிவிட்டன. பாடல்கள் கேட்க, வீடியோக்கள் பார்க்க, Zoom கால், meeting என எல்லாவற்றிற்கும் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சாதாரணமான பார்த்தல் இது ஆபத்தில்லாததாகத் தோன்றினாலும், அதிக நேரம், அதிக ஒலியுடன் தொடர்ந்து பயன்படுத்துவது உடல்நலத்திற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. நாம் எதையும் அளவுக்கு மீறி பயன்படுத்தும்போது அது நன்மையை விட தீமையை ஏற்படுத்தும்.
இயர்போன் மற்றும் ப்ளூடூத் சாதனங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பலரும் இந்த சாதனங்களை குறைந்தபட்சமாக 4 முதல் 6 மணி நேரம் வரை பயன்படுத்துகிறார்கள். ஆனால், இதன் பின்னணி பாதிப்புகள் மெதுவாக உடலுக்கு தெரிந்தே வரும். ஆரம்பத்தில் சிறிய எரிச்சல் போன்று தோன்றும் பின்விளைவுகள், நாளடைவில் ஆழ்ந்த நலச்சிக்கல்களாக மாறும். முதன்மையாகக் குறிப்பிட வேண்டிய விஷயம் காது செவித்திறன் குறைபாடு. இயர்போன் மூலம் நேரடியாக செவிக்குள் விரைவான அதிர்வெண்கள் (high frequency sounds) சென்று கொண்டிருக்கும் இது அதிர்வுகளை உணரும் நரம்புகளை காயப்படுத்தும். தினமும் அதிக decibel-இல் பாடல்கள் கேட்பது, குறிப்பாக இளம் வயதில், நிரந்தர செவிவிகிதக் குறைபாட்டை ஏற்படுத்தும் ஆபத்து உண்டு. “Noise-induced hearing loss” (NIHL) எனப்படும். வயது ஆகும்போது திசுக்கள் சோர்வடையும் காதுசுத்தமாக கேட்காது. உலக சுகாதார அமைப்பின் படி, 85 decibels-க்கு மேல் ஒலி தொடர்ச்சியாக கேட்டால், அது செவிக்கு தீங்கு விளைவிக்கும்.
பல ஆண்கள் தொப்பை குறைக்க எளிய வழியை கண்டுபுடிச்சிட்டாங்க அது என்ன தெரியுமா
அடுத்ததாக கவனிக்க வேண்டியது தலைவலி மற்றும் கண்ணெரிச்சல். ப்ளூடூத் இயர்போன் சாதனங்களை நீண்ட நேரம் அணிவதால், காது சுற்றியுள்ள தசைகள், நரம்புகள் அழுத்தம் பெறுகின்றன. குறிப்பாக rubber-tipped buds போன்றவை மிகப்பெரிய அழுத்தத்துடன் செவிக்குள் பதிந்திருப்பதால், பக்கவாட்டுப் பகுதி வலியுடன் சோர்வடைகிறது. இது சிலருக்கு தடுமாற்றம், தலை சுற்றல் உடல் வெப்பம், மயக்கம் போன்ற தாக்கங்களை ஏற்படுத்தும். மேலும், வலது/இடது மூளையின் ஒரு பகுதி மட்டும் தொடர்ந்து செயல்படுவதால் balance system பாதிக்கப்படும்.
இது நமது உடலை நேர்த்தியாக இயக்கும் சக்தியை நசுக்கிறது. மேலும், மூளையில் இருக்கும் ஒலி அடையாள nerves இடமாற்றமடைந்து, நரம்புத் தளர்ச்சி ஏற்படும். ப்ளூடூத் சாதனங்களில் மிக முக்கியமான பாதிப்பு என்பது கதிர்வீச்சு (radiation). ப்ளூடூத் சாதனங்கள் குறைந்தளவிலான electromagnetic radiation-ஐ விடுவிக்கும். இது மிகச் சிறிய அளவானவை என்றாலும், நாள்தோறும் நீண்ட நேரம் தலையோடு நெருக்கமாக வைத்திருப்பதால் அதன் தாக்கம் அதிகமாகும். சில ஆராய்ச்சிகளின்படி, radiation ஒளியால் மூளை செல்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சிறிய குழந்தைகளுக்கு மற்றும் இளைஞர்களை இந்த radiation பாதிக்கும், தொடக்கத்தில் நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடும். WHO மற்றும் IARC ஆகிய அமைப்புகள் ப்ளூடூத் சாதனங்களை “பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகை 2B radiation” என வகைப்படுத்தியுள்ளன. இது சமீப காலங்களில் உளநல சிக்கல்கள், நினைவாற்றல் குறைபாடு போன்றவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து இயர்போன் அணிவது காதுகளில் தொற்று (Ear Infection) ஏற்படுவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது. செவிக்குள் நீண்ட நேரம் இயர்போன் பயன்படுத்தும்போது காற்றோட்டம் குறைகிறது. இதனால் செவிக்குள் ஈரப்பதம் அதிகரித்து பாக்டீரியா, பூஞ்சைகள் வளர உதவுகின்றன. ஒருவருடைய இயர்போனை மற்றொருவர் பயன்படுத்தும்போதோ, சுத்தம் செய்யாமல் பயன்படுத்தும்போதோ, பாக்டீரியா பரவுவது சகஜம். இதனால் காது நுரைப்பு, சிவப்பு, உருகல், எரிச்சல் போன்ற தொற்று நோய்கள் தோன்றும். சிலருக்கு இந்த பாக்டீரியா செவியின் உள்ளக பாகம் வரை சென்றுவிடலாம்.
இது இடையில் hearing loss மற்றும் மூளைக்கு infection வருவதற்கும் வழிவகுக்கும். கடைசியாக, ப்ளூடூத் இயர்போன்கள் மனச்சோர்வு, social withdrawal, மற்றும் dependency-ஐ ஏற்படுத்தும். பலர் இயர்போன் அணிந்து தனியாக இருக்க விரும்புகிறார்கள். இதனால் மனித உறவுகளில் உரையாடல்கள் குறையும். சிலர் இயர்போன் இல்லாமல் concentrate செய்ய முடியாத அளவுக்கு audio dependency-க்கு ஆளாகிறார்கள். இது மனச்சோர்வு, தனிமை, மன அழுத்தம் ஆகியவற்றை உருவாக்கும். மேலும், நாள்தோறும் 5–6 மணி நேரம் இயர்போன் உடன் இருப்பதால் மூளை நேர்மறையான தூண்டுதல்களை தவிர்த்து, artificial stimulation-க்கு பழகிவிடுகிறது. இது dopamine செயல்முறை பாதித்து, உண்மை மகிழ்ச்சி உணர்வைத் தடை செய்கிறது.
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்