அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீராசாமிநாதன் வீட்டில் 18 மணி நேரம் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

வேடசந்தூர் கொங்கு நகரில் உள்ள சுவாமிநாதனுக்கு சொந்தமான வீடு மற்றும் தமுத்து பட்டியில் உள்ள பண்ணை வீட்டிலும் சோதனை நடைபெற்றது. வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர்ராக இருந்து வரும் வீராசாமிநாதன் 25 மாவட்டங்களில் டாஸ்மாக் பார் வசூலை கவனித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் கரூரில் அண்மையில் நடைபெற்ற சோதனையின் தொடர்ச்சியாக இவரது வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
