டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலன் மஸ்க்க்கு தற்போது இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. எலன் மஸ்க் அவர்கள் தனது நிறுவனத்தின் மூத்த அதிகாரியான ஷிவான் ஜில்ஸுடன் சேர்ந்து இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
இந்த குழந்தைகள் சென்ற வருடம் நவம்பர் மாதம் பிறந்துள்ளது. ஆனால் அந்த தகவல்கள் தற்போது தான் வெளி உலகத்திற்கு தெரிந்துள்ளது. எலன் மஸ்க் தயாரித்த ஸ்டார்ட் அப் நிறுவனமான நியூரா லிங்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர்தான் ஜில்ஸ். இருவரும் சேர்ந்து இரட்டை குழந்தைகளை தற்போது பெற்றெடுத்துள்ளனர்.
இருவரும் தங்களின் இரட்டை குழந்தைகளின் பெயர் மாற்றுவதற்காக மனு அளித்தனர். அதாவது தந்தையின் பெயரை குழந்தைக்கு கடைசி பெயராகவும், அம்மாவின் பெயரை நடு பெயராகவும் வைக்க கூறிய மனு தான் அது. இருவரின் கோரிக்கையும் ஏற்று நீதிபதி இதற்கு ஒப்புதல் அளித்தார். 2016 ஆம் ஆண்டு தான் ஜில்சை எலன் மஸ்க் ஒரு நுண்ணறிவு நிறுவனத்தில் முதலில் கண்டார்.

அதன்பின் நியூராலிங் நிறுவனத்தின் இயக்குனராக 2017 ஆம் ஆண்டில் இவரை ஒப்பந்தம் செய்தார்.
தற்போது இவரின் இரட்டைக் குழந்தையோடு சேர்த்து மொத்தம் ஒன்பது குழந்தைகள் உள்ளது. அதாவது கனடா நாட்டு பாடகர் கிரீம்ஸை இவர் திருமணம் செய்தார். அப்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது. அதன் பிறகு கன்னட எழுத்தாளரான முன்னாள் மனைவி ஜஸ்டின் வில்சன் உடன் சேர்ந்து 5 குழந்தைகளை பெற்றெடுத்தார். தற்போது ஜில்சை திருமணம் செய்து இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். மொத்தமாக சேர்த்து இவருக்கு ஒன்பது குழந்தைகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
