தமிழ் நடிகை ஏமி ஜாக்சன் தனது மகனுடன் பீச்சில் சந்தோஷமாக விளையாடுவது போன்ற ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் மதராசப்பட்டினம் திரைப்படம் மூலம் முதன் முறையாக அறிமுகமாகி பின்னர் ரஜினியுடன் ரோபோ 2.0, விஜயுடன் தெறி, விக்ரமுடன் ஐ, தனுஷ் தங்க மகன், உதயநிதியுடன் கெத்து உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்த எல்லோருக்கும் தெரிந்த முகம் ஆனார். அதன் பின்பு இந்தி நடிகர் பிரதீக் பப்பர் இவர் காதலித்து வந்தார் அதன்பிறகு தொழில் அதிபர் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தான் அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்தது. திருமணத்திற்கு முன்னரே ஏமி ஜாக்சன் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
“நெல்சனை ட்ரோல் பன்னாதீங்க…” ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்த இயக்குனர் லோகேஷ்

அந்த குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் ஜக்கஸ் என பெயர் வைத்தார். இதற்கிடையே தனது இன்ஸ்டாகிராமில் மற்ற ஆண் நண்பருடன் எடுத்த போட்டோக்களை டெலீட் செய்தார். எப்போதுமே தனது மகனுடன் அதிக நேரத்தை செலவிடுவார். மகனுடன் எடுக்கும் போட்டோக்கள் வீடியோக்கள் எல்லாம் ஷேர் செய்வார் அப்படி பீச்சில் மகனுடன் ஜாலியாக விளையாடிய போது அந்த வீடியோவை எடுத்து அதை பதிவிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
