இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி ஆட்டத்தை வென்றது. தேவையில்லாத ஆணி
டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் நாளிலேயே சறுக்கியது. என்னதான் விரைவில் விக்கெட்கள் சரிந்தாலும் பண்ட் மற்றும் ஜடேஜா கைகோர்த்து இந்தியாவை 400 ரன்கள் அடையச் செய்ய உறுதுணையாக இருந்தனர். பின்னர் 400 என்ற பெரிய இலக்குடன் முதல் இன்னிங்ஸ் பேட்டிங் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கும் விக்கெட்டுகள் சரமாரியாக சரிந்தது. அதன் பின்னர் சதம் அடித்து ஏதோ கொஞ்சம் நல்ல டோட்டலுக்கு எடுத்து வந்தார் ஜானி. இருந்தாலும் அந்த ரன்கள் போதவில்லை.
அதனால் இரண்டாவது இன்னிங்ஸை சுமார் நூறு ரன்களுக்கு மேல் லீட் வைத்து தங்களுடைய ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி பிறகு 200 ரன்களுக்கு மேல் எட்டியது. அதனால் கடைசி (4&5) நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 378 ரன்கள் தேவைப்பட்டது. டெஸ்ட் போட்டிகளில் 378 இலக்கு என்பது மிகவும் ஒரு கடினமான இலக்காகும். ஆனால் அந்த இலக்கை நோக்கி இங்கிலாந்து வீரர்கள் மிக சுலபமாக கடந்து விட்டனர். முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் மட்டும் 100 ரன்களை கடந்தது. அதன் பின்பு ஜோடி சேர்ந்த பைர்ஸ்டோவ் மற்றும் ரூட் 200 ரண்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் வைத்து இந்த இலக்கை சுலபமாக முடித்து விட்டனர். நன்றாக விளையாடிய ரூட் தொடர்நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு டெஸ்ட் போட்டியில் 250 ரண்களுக்கு மேல் அடித்தும் தோற்றது இதுதான் முதல் முறை என தேவையில்லாத ஒரு ரெக்கார்டை தற்போது சுமந்து இருக்கின்றனர். கடந்த பத்து வருடங்களாகவே இந்தியாவின் ஆட்டம் வெளிநாடு அணிகளிடையே சற்று மோசமாக இருந்து வருகிறது. என்னதான் ஆஸ்திரேலியாவிடம் இரண்டு முறை ஜெயித்திருந்தாலும், சவுத் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து என மற்ற மூன்று அணிகளிடம் சரமாரியாக தோற்று இருக்கின்றனர். இதனால் இந்தியா டெஸ்ட் அணில் தற்போது பெரிய சருக்களை சந்தித்து வருகிறது.
மேலும் இந்த ஆட்டத்திற்கு முன்பு இந்திய ரசிகர்கள் எப்படியாவது இந்த போட்டியினை வென்று விடலாம் என்று எண்ணத்தில் இருந்தனர். ஆனால் அவர்களின் எண்ணத்தில் மண்ணை அள்ளி போடுவது போல் இங்கிலாந்து தரமாக இந்த மேட்சினை வென்றுள்ளது. மேலும் இந்த மேட்ச் தொடங்குவதற்கு முன்பு சோனி நிறுவனம் ஒரு விளம்பரத்தை உருவாக்கியது. அந்த விளம்பரத்தில் இங்கிலாந்து அணியுடைய டிரஸ்ஸை கிழித்து தொங்கவிடுவது போல ஒரு காட்சி அமைந்திருந்தது. அதாவது இங்கிலாந்து அணியை இந்தியா எளிதில் துவம்சம் செய்து விடும் என்பதற்கு பொருள் தான் அது.

ஆனால் தற்போது நிலைமையோ தலைகீழாக ஆகிவிட்டதால் அந்த வீடியோ விளம்பரத்தை தற்போது இங்கிலாந்து ரசிகர்கள், இந்திய ரசிகர்கள் என இரண்டு தரப்பு ரசிகர்களும் கலாய்த்து வருகின்றனர். இப்படி ஒரு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விட்டு இந்த விளம்பரம் தேவைதானா என இந்திய ரசிகர்களே கலாய்த்து வருகின்றனர். போனது போகட்டும் இனி டி20 சீரியஸ் ஆரம்பிக்க போகிறது அதனால் அதில் கவனத்தை செலுத்தலாம் என இந்திய ரசிகர்களும் இதை சீக்கிரம் மறந்து விடுவார்கள்.