“சேரி மக்கள் அப்படி தான் கேட்ட வார்த்தை பேசுவாங்க…..” வாயை கொடுத்து வாங்கி கட்டி கொண்ட இரவின் நிழல் பட குழு

சேரி மக்கள் அப்படித்தான் பேசுவார்கள் என இரவில் நிழல் பட நடிகை பிரிகிடா பேசிய பேச்சு தற்போது சர்ச்சையை கிளம்பி இருக்கிறது. அதற்காக அவரின் சார்பாக நடிகர் பார்த்திபனும் பொது வெளியில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஆஹா கல்யாணம் என்கிற வெப் தொடரின் மூலம் பவி டீச்சர் என எல்லோராலும் செல்லமாக அறியப்பட்டவர் தான் இவர். இவர் தற்போது பார்த்திபன் இயக்கத்தில் உருவான இரவின் நிழல் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். உதவி இயக்குனராக பணியாற்ற சென்ற அவருக்கு ஹீரோயின் சான்ஸ் கொடுத்து ஆச்சரியப்படுத்தி அழகு பார்த்திருக்கிறார் பார்த்திபன்.

இந்த படம் கடந்த வாரம் வெளியாகி பெரும்பாலும் ஒரு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் ஒரு சிங்கிள் சாட்டில் எடுக்கப்பட்டது என எல்லோரும் அறிந்ததே. இந்த படத்தின் மூலம் அறிமுகம் ஆகியிருக்கும் இவர் நடிப்புக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்திருக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க இவர் சேரி மக்கள் அப்படித்தான் என பேசிய ஒரு பேச்சை தற்போது சிச்சியை கிளப்பி உள்ளது மேலும் அது குறித்து அவர் கூறியதாவது :- இரவின் நிழல் படத்தின் கதை தனி ஒருவனை பற்றியது தான். அவனது வாழ்க்கையில் கெட்டது மட்டுமே தான் நடந்திருக்கிறது என்றால் அதனை ராவாகத்தான் சொல்ல முடியும். உதாரணத்திற்கு ஒரு சேரி பகுதிக்கு போகிறோம் என்றால் அங்கு கெட்ட வார்த்தை மட்டுமே தான் கேட்க முடியும். சினிமாவுக்காக யாரும் எதையும் மாற்ற முடியாது என அவர் பேசியிருந்தார்.

கள்ளக்குறிச்சியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம்

தற்போது இந்த பேச்சுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை அடுத்து தனது ட்விட்டர் வாயிலாக எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதற்காக நான் அப்படி கூறியது தவறுதான் என்னை மன்னித்து விடுங்கள் என கூறியிருக்கிறார் அதற்கு பார்த்திபனும் அந்த ஹீரோயின் சார்பாக மன்னிப்பு கேட்டார் அவர் கூறியதாவது :- “Brigida சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் மனக்காயம் அடைந்தவர்களிடம்.1989-ல் நடக்கும் கதையிது.2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம்,கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால்.என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை hero ஆக்குவதே!”
என கூறியிருக்கிறார்.

Recent Articles

spot_img

Related Stories

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay on op - Ge the daily news in your inbox