“படம் வெளியானது பிறகு எங்கள சூர்யா கண்டுக்கவே இல்ல” | ஜெய் பீம் சர்ச்சை | பட்டியலின நபர் கதறல்

ஞான வேல் ராஜா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் ஜெய் பீம். இந்த திரைப்படம் பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்களைப் பெற்றது. இந்த திரைப்படம் தற்போது வரைக்கும் உலக அரங்கில் பல்வேறு விருதுகளை குவித்தது. அதேபோல் சர்வதேச திரைப்பட விழாக்களில் காட்சிப்படுத்தப்பட்டும் வந்தது. பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ராஜாகண்ணு என்பருடைய குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பான உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த திரைப்படம் உருவாகி இருந்தது.

பல தரப்பில் இருந்து ஆதரவு கருத்துக்களை இந்த திரைப்படம் எப்படி பெற்றதோ, அதே வேளையில் திரைப்படத்தில் சில காட்சிகள் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து உதவிகளும் கிடைத்தது. இந்த நிலையில் “இந்த உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட எங்கள படக்குழுவினர் யாரும் இதுவரை கண்டுகொள்ளவில்லை” என கொளஞ்சியப்பன் என்பவர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வழக்கறிஞருடன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில் “1993ல் நடந்த கதையிது. ராஜாகண்ணு என்பவர் எனது மாமா. ஆச்சி என்பது எனது அம்மா. 1993 கம்மாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ஏதோ திருட்டு போயிருந்தது. அந்த வழக்கில் நாங்கள் ஈடுபடவில்லை. ராஜாக்கண்ணு குடும்பத்தை போலீசார் விசாரித்தபோது அந்த நேரத்தில் நாங்க வேறு ஒரு கிராமத்துக்கு சென்று வந்தோம். அவர்களை காவல் நிலையத்தில் வைத்து அடித்து உங்க வீட்டுக்கு யார் யார் விருந்தாளி வந்தார்கள் எனக் கேட்டதற்கு, எங்க அக்கா வீட்டு பிள்ளைகள் எல்லாம் வந்தார்கள் என அவங்க சொல்லி இருக்காங்க. மேலும் அவர்கள் ஊருக்கு போய்விட்டார்கள் அப்படின்னும் கூறி இருக்காங்க.

அந்த அடிப்படையில் போலீசார் பந்தநல்லூரில் இருந்தா எங்க வீட்டுக்கு வந்தாங்க. என்னை, எனது அம்மாவை, எனது அண்ணன் மூணு பேரையும் அடித்து வேனில் ஏத்திக்கிட்டு கம்மாபுரம் கொண்டு போனாங்க. எனது அம்மாவையும், எனது அண்ணனையும் கொச்சையாக நடத்தினாங்க. அடி தாங்க முடியாமல் நாங்க அங்கேயே அமர்ந்து இருந்தோம். ஏழரை மணி அளவிற்கு எங்க அண்ணன், எங்க மாமா ராஜாக்கண்ணு, இன்னொரு மாமா என மூன்று பேரையும் போலீஸ் ஸ்டேஷனிலேயே வைத்து விட்டு என்னையும் எங்க அம்மாவையும் ஊருக்கு பஸ் ஏத்தி விட்டுட்டாங்க. நாங்க ஊருக்கு போய் விட்டோம். அதன் பிறகு ராஜாக்கண்ணு தப்பி ஓடிவிட்டார் என்று சொல்லிட்டாங்க.

இது தொடர்பாக கோர்ட்டில் கேஸ் போடப் பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கோவிந்தன் பாலகிருஷ்ணன் அவங்க எல்லாம் கேஸ் நடத்துனாங்க. நாங்களும் கோர்ட்டில் சாட்சி சொன்னோம். அதன் பிறகு ஜெய்பீம் என்ற திரைப்படத்தை எங்கள் கதையை வைத்து எடுத்தாங்க. ஆனால் ஜெய்பீம் படக்குழுவின் எங்களுக்கு என்று என்ன செய்தார்கள் ? எங்களை ஆதரிக்க யாரும் இல்ல, அன்னைக்கு எல்லாமே செய்துட்டு இன்னைக்கு போட்டுக்கொள்ள செருப்பு கூட இல்லாம அனாதையாக நிற்கிறோம். எங்கள தேடி வருவார்கள் என்று எதிர்பார்த்தோம் ஆனால் வரவில்லை. ஆதாரத்தை எல்லாம் எனது வழக்கறிஞரிடம் கொடுத்துள்ள ராஜாக்கண்ணு குடும்பத்துக்கு எப்படி உதவி செய்தார்களோ அது மாதிரி எங்களுக்கு உதவி பண்ண வேண்டும் அப்படின்னு கேட்டிருக்காங்க.

அதற்கு பிறகு செய்தியாளரிடம் பேசிய கொளஞ்சியப்பன் வழக்கறிஞர் “இவர்கள் கேட்பது உதவி அல்ல ராயல்டி. காவல்துறை சித்திரவதையில் பாதிக்கப்பட்டவர்கள் இவர் குடும்பத்தில் நான்கு பேர் இவருடைய அம்மா ஆச்சி, இவரது அண்ணன் குள்ளன், மாமா கோவிந்தராஜ் பெரிய மாமா ராஜாக்கண்ணு ராஜா தன்னுடைய மனைவி பார்வதி அம்மாள் இவர்கள் எல்லாருமே பாதிக்கப்பட்டு இருக்காங்க. இயக்குனர் ஞானவேல் இவரை சந்தித்து இந்த கஸ்டடி சம்பவத்தை போலீஸ் ஸ்டேஷனில் நடந்த பெற்ற படமாக எடுக்கப் போகிறோம் நீங்கள் உண்மையாக அங்கு என்ன நடந்ததோ அதை எல்லாம் சொல்லுங்க அப்படின்னு கேட்டு வாங்கி இருக்காரு. மேலும் இந்த கதைக்கு உரிமைக்காக ஒரு கோடி ரூபாயை உங்களுக்கு அட்வான்ஸாக கொடுக்கிறோம் அதேபோல இந்த படத்தில் வரும் 20 சதவீதத்தை உங்களுக்கு கொடுக்கிறோம் என இவர்களிடம் நடந்த சம்பவத்தை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டதோடு இவர் நோட்டில் எழுதி வைத்திருந்த சம்பவங்கள் தொடர்பான குறிப்பையும் வாங்கிட்டு போய் இருக்காரு.

அதன்பிறகு இவரை திரும்பி கூட பார்க்கவில்லை. இந்த திரைப்படத்தை பார்த்த பிறகு இவர்கள் அதிர்ச்சி அடைந்து நம்முடைய கதை அவர்கள் சினிமாவா எடுத்திருக்காங்க. அதுவும் நம்முடைய அனுமதி இல்லாம அப்படின்னு தெரிஞ்சிருக்காது. காப்பிரைட் சட்டத்தின்படி கதைக்கான கர்த்தா கிட்ட பர்மிஷன் பெற எழுத்துப்பூர்வமான ஒரு கடிதத்தை வாங்கணும். இவர்கள் வாழ்க்கையில் நடந்த துயர சம்பவத்தை இவரிடம் கேட்டு தெரிந்துகொண்டு அனுமதி கடிதம் இல்லாமல் படத்தை எடுத்திருக்கிறார்கள் அப்படிங்கிறது குற்றசாட்டு அமைந்திருக்கு.

ஒரு பட்டியல் சமுதாயத்தின் அழிவை வெறும் பணம் சம்பாதிக்க அனுமதிக்க முடியாது, அதை சட்டமம் அனுமதிக்காது. அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்திருக்கிறார். தமிழக காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்படி என்று நம்புவோம், அப்படி எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தின் மூலம் எங்கள் உரிமையை நிலைநாட்டுவோம் என கூறியிருக்கிறார்.

Recent Articles

spot_img

Related Stories

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay on op - Ge the daily news in your inbox