“அஜித் ஒரு பப்ளிசிட்டி பிரியர், ஈகோ பார்ப்பவர், வடிவேலுவுடன் இணைந்து நடிக்காததற்கும் காரணம் இது தான்” – காமெடி நடிகர் டெலிபோன் ராஜ் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகனான டெலிபோன் ராஜ், அஜித் ஒரு பப்ளிசிட்டி பிரியர், ஈகோ பார்ப்பவர் என்று அவரை மிகவும் விமர்சித்துள்ளார்.

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு உச்சபட்ச நடிகர் ஆவார். இவருடைய படம் வெளியாகிறது என்றாலே அவருடைய ரசிகர்களுக்கு திருவிழா தான். அந்த அளவிற்கு பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போடும் ஹீரோக்களில் இவர் கண்டிப்பாக வருவார். அந்த அளவிற்கு பெயரை சம்பாதித்து இருக்கிற இவர் ஒரு பப்ளிசிட்டி வெறியர் எனவும், ஈகோ அதிகம் உள்ள நபர் எனவும் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்த டெலிபோன் ராஜ் கூறியுள்ளார். வடிவேலுக்கும் அஜித்திற்கும் ஏன் வாக்குவாதம் ஏற்பட்டது என்பது குறித்து கேள்விக்கு பதில் அளித்த டெலிபோன் ராஜ் அவர்கள் இதை தெரிவித்தார். அவர் கூறுகையில்

டிக் டாக் பிரபலம் ஜெஸ்ருதி காணாமல் போய்விட்டார் என அவருடைய அம்மா கதரும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக வைரல்

:- “அஜித்தை விட வயதில் பெரியவர் தான் வடிவேலு. இவர்கள் இருவரும் ராஜா படத்தில் ஒன்றாக நடித்த சூட்டிங் ஸ்பாட்டில் அவருடைய பெயரை சொல்லி அஜித் என கூப்பிட்டு இருக்கிறார் வடிவேலு. ஆனால் அதனை பொறுத்துக் கொள்ள முடியாத அஜித் அவர்கள். என்னை எப்படி இவர் பெயர் சொல்லி கூப்பிடலாம் ? என்கிற ஒரு ஈகோ அவருக்குள் உள்ளது. வடிவேலு ஒரு பெரிய ஆள் என்பதால் தான் அவரை ராஜா படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். வடிவேலு ஒரு ஹைலைட்டான காமெடி மன்னன். அந்த ஒரு இடத்தில் ஈகோ பார்ப்பது தவறு. ஆனால் அஜித் அந்த இடத்தில் ஈகோ பார்த்தார். அவர் ஈகோ பார்த்ததால் வடிவேலு அடுத்தடுத்த படங்களில் அஜித் உடன் நடிக்க மறுத்துவிட்டார்.

மேலும் பேசிய அவர் அஜித் ஒரு மிகப்பெரிய பப்ளிசிட்டி மன்னன் எனவும் கூறினார். தான் கொடுப்பது யாருக்கும் தெரியக்கூடாது அப்படின்னு நினைக்கிற மனுஷன் தான் அஜித்ன்னு சொல்லுவாங்க. ஆனா அது கிடையவே கிடையாது. அவர் கொடுத்த விஷயத்தை இன்னொருத்தர் மூலமா வெளியே பரப்புவாரு. இந்த மாதிரி பரப்பி தான் அவர் பப்ளிசிட்டிய தேடி இருக்காரு. அது யாருக்கும் தெரியாது. இதை நான் கேள்விப்பட்ட ஒரு விஷயம். தன்னுடைய போட்டோக்கள் வெளியே வரக்கூடாது எனக் கூறுவர். ஆனால் எல்லா போட்டோக்களும் வெளியே வந்துடும். அதற்கு காரணம் அவர்தான். அப்படிப்பட்ட ஒரு பப்ளிசிட்டி பிரியர் தான் அஜித் குமார் என நடிகர் அஜித்குமார் பற்றி இப்படி மிகப்பெரிய குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் நடிகர் டெலிபோன் ராஜ். இது தற்போது வைரலாக பரவி அஜித் ரசிகர்களை வெறுப்படைய செய்திருக்கிறது.

Recent Articles

spot_img

Related Stories

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay on op - Ge the daily news in your inbox