மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் பிரபலம் …. வாரிசு பட சூட்டிங் திடீர் நிறுத்தம் | என்ன ஆனது ?

விறுவிறுப்பாக நடந்து வந்த விஜயின் வாரிசு பட சூட்டிங் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவின் தயாரிப்பில் நடிகர் தளபதி விஜய் நடிக்கும் படம் தான் வாரிசு. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஸ்மிகா மந்தனா நடிக்கிறார். கார்த்தியின் தோழா படத்தை இயக்கிய வம்சி தான் இந்த படத்தை இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்கை சென்னையில் நடத்திய படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் நடத்தி வருகிறது.

Viral Video | “ப்ளூ சட்டை மாறனை இறங்கி செய்து விடலாம் என முடிவு செய்துவிட்டேன்….” நேர்காணலில் ஓபன் டாக் விட்ட கவுதம் மேனன்

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்த படத்தின் சூட்டிங் தற்போது 100 நாட்களைக் கடந்து நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் இறுதி கட்ட சூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. அப்போது படப்பிடிப்பின் போது இயக்குனர் வம்சைக்கு திடீரென உடல் நலவு குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவரை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மருத்துவமனையில் இவர் கட்டாயம் ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்களாம். இதனால் தற்போது அவர் ஓய்வில் இருந்து வருகிறார். இவர் எப்போது உடல்நலம் தேறி வருகிறாரோ அப்போது மீண்டும் படபிடிப்பு தொடங்கிக் கொள்ளலாம் என பட குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப் போகிறது அந்த படக்குழு.

Recent Articles

spot_img

Related Stories

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay on op - Ge the daily news in your inbox