Watch Video | “வருடாவருடம் நீ என்னை மாற்றுகிறாய் .. இ லவ் யு தங்கமே …” | பிறந்தநாளில் கூட மனைவியை போற்றிய விக்னேஷ்

உன்னுடன் நான் கொண்டாடும் என்னுடைய எட்டாவது பிறந்தநாள் என நயன்தாராவை பற்றி நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

தற்போது துபாய்க்கு சுற்றுப்பயணம் சென்று இருக்கும் நயன்தாரா விக்னேஷ் சிவன் அங்கு புர்ஜ் கலிபா கட்டடத்தின் முன்னால் நின்று தன் காதல் மனைவியுடன் சந்தோசத்தில் திலைத்தபடி இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

“காமெடி நடிகர் போண்டா மணியின் மருத்துவ செலவை அரசே ஏற்கும்” – மா சுப்ரமணியம்

தற்போது இந்த கொண்டாட்ட புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் இதற்கு லைக்குகளை அள்ளி தெளித்து வருகின்றனர். மேலும் துபாயில் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ வையும் அந்த வீடியோவுடன் சேர்த்து ஒரு கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார். அதில் :- “இது உன்னுடன் நான் கொண்டாடும் என்னுடைய எட்டாவது பிறந்தநாள் தங்கமே. என் எல்லா பிறந்த நாளையும் முந்தைய பிறந்த நாளை விட நீ இன்னும் அழகாக மாற்றுகிறாய்.

ஆனாலும் இந்த பிறந்தநாள் எனக்கு மிகவும் உணர்ச்சிகரமானது. இப்படிப்பட்ட ஒரு காதலியாக நீ எனக்கு அமைந்ததற்கு நன்றி. என்னை மிகவும் மகிழ்ச்சியாய் வைத்திருக்கிறாய் ஐ லவ் யூ” என்று கூறி அந்த பதிவை முடித்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Recent Articles

spot_img

Related Stories

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay on op - Ge the daily news in your inbox