கட்சியில் தாம் நிரந்தரமாக செயல்பட வேண்டும் என்பதற்காக ஒரு புதிய மாஸ்டர் பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார் எடப்பாடி. அது என்ன என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கப்போகிறோம்.
அதிமுகவினரின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் தீவிரமான ஆலோசனைகளை கலந்துரையாட இந்த கூட்டம் கூட்டப்பட்டது. மேலும் வேறு சில விஷயங்களை விவாதிக்கவும் கூட்டப்பட்டது. 23ஆம் தேதி தான் பொதுச் செயலாளர் யார் எனத் தெரிவிக்கப்படும் என கூறியிருந்தனர்.
மேலும் அதில் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி தொடருமா அல்லது கூட்டணியை நிறுத்திக் கொள்வோமா என இதுபோன்று விவாதிக்க தான் இந்த கூட்டத்தை அவர்கள் கூட்டினார்கள். தற்போது எதிர்க்கட்சி நாங்கள் தான் என பாஜக கூறி வருகிறது என்பதும் அதிமுகவுக்கு ஒரு நெருடலாக இருந்தது. அதனால் அதை விவாதிக்க கூட்டப்பட்ட கூட்டத்தில் ஒற்றை தலைமை பற்றி விவாதித்திருக்கிறார்கள் அதிமுகவின் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படும் முறை தன்மையைக் போன்ற விஷயங்களை நடந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.
“நாங்கள்தான் தற்போது எதிர்க்கட்சி”- புது குண்டை தூக்கிப்போட்ட பிரேமலதா
மேலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒரு முக்கிய பதவியை தனக்காக உருவாக்கி அதில் அமர்ந்து கொள்ளலாம் எனவும் மாஸ்டர் ப்ளான் போட்டு வருகிறார் என்று ஒரு பக்கம் கூறி வருகின்றன. மேலும் அவருக்கு சாதகமாக 20க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள். ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி சற்று கம்பீரமாக இருக்கிறார். அவர்தான் பொதுச்செயலாளராக வேண்டும் என்றும் பொதுக்கூட்டத்தில் கூறி வருகின்றனர்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த பொதுச் செயலாளர் பதவி மீது ஆசையில்லை அவர்களைவிட உயர்ந்த பதவியை ஏற்க வேண்டும் என்று தான் புதியதாக ஒரு பதவியை உருவாக்கி உள்ளார். அதிமுகவை எம்ஜிஆர் உருவாகும்போதே தலைவர் பதவி வேண்டாம் அண்ணா தான் எப்போதும் எங்கள் தலைவர் என்று பொதுச் செயலாளர் பதவியை உருவாக்கினார். அதனால் எடப்பாடி தலைவர் பதவியை உருவாக்க நினைக்கவில்லை அதற்கு மாறாக பொதுச்செயலாளரிலேயே இன்னும் அதிக அதிகாரம் மிக்க செயலாளர் என்ற பதவியை நியமிக்க முடிவு செய்திருக்கிறாராம். அதவாது “அதிகாரமிக்க பொதுச் செயலாளர்” என்ற பெயரைக் கொண்டு அதை அவர் உருவாக்கி, அதில் அமர காத்திருக்கிறாராம். இதனுடைய அர்த்தம் என்னவென்றால் கட்சியில் நடக்கும் எல்லா விஷயமும் நம்முடைய தலைமையில் தான் நடக்க வேண்டும் என்பதாகும். இந்த பதவிக்கு பொதுச்செயலாளர் கூட எதிராக பேச முடியாது.
ஜெயலலிதா மரணித்த பின்னர் சசிகலா சிறைக்கு சென்ற போது அதிமுக பொதுக்குழு கூடி சசிகலாவை பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி அந்த பதவியை பறித்தது ஆனால் இந்த அதிகாரமிக்க பொதுச்செயலாளர் என்ற பதவியை உடனே நீக்க முடியாது என்ற வகையில் பெரிய அதிகாரத்துடன் கொண்ட ஒரு பொறுப்பாக இது இருக்கும் என கூறுகிறார்கள்.
இதிலிருந்தே தெரிகிறது எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் ஒரு நிரந்தர பொறுப்பில் இருக்க வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார்.
