சென்னை ராயப்பேட்டையில் அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து நடக்கப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பிரமுகர் ஒருவரை ரத்த காயங்கள் வருமளவிற்கு தாக்கியுள்ளனர்.
கடந்த ஒரு சில தினங்களாகவே அதிமுகவுக்கு ஒற்றை தலைமை யாரென்ற பேச்சுவார்த்தை அரசியல் வட்டாரங்களில் பெரிதாகப் பேசப்படுகிறது. முன்பு இருந்தது போல எடப்பாடி பழனிச்சாமி வருவாரா, இல்லை பன்னீர்செல்வம் வருவாரா என கேள்வி அதிமுக தொண்டர்கள் இடையே எழுந்துள்ளது. இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட அவ்வப்போது ஆலோசனை கூட்டத்தை கூட்டி வருகின்றனர்.


இருதரப்பினரும் அதன்படி இன்று ராயபுரத்தில் ஒற்றை தலைமை குறித்து ஆலோசனை கூட்டத்தில் மும்முரமாக நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சற்று மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த மோதல் காரணமாக அதிமுக பிரமுகர் ஒருவரை ரத்த காயங்கள் வருமளவிற்கு தாக்கியுள்ளனர். அவரைத் தாக்குவதற்கு முன்பு நீ எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளரா என்று கேட்டு விட்டு அதற்குப் பின் தாக்கியதாக கூறப்படுகிறது. எனவே இவர்களுக்குள் நடக்கும் உள்கட்சி பூசல் எந்த அளவிற்கு பூதாகரமாக வெடிக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
