அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் கடந்த ஒரு சில தினங்களாகவே மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதிமுகவை சிலர் வீழ்த்த முயல்கின்றனர் என பரபரப்பாக பேசி அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளார்.


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் பல குழப்பங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. ஜெயலலிதா மறைந்த பின்பு சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தது அதிமுக பின்பு அந்த பொதுச் செயலாளர் பதவியையும் நீக்கி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரண்டு பிரிவுகளில் வைத்துக்கொண்டு EPS & OPS ஆட்சி செய்து வந்தார்கள். தற்போது அமைச்சர்களின் வார்த்தைகளுக்குணங்க ஒற்றைத் தலைமையை கொண்டு வரலாம் என முடிவு செய்து விட்டனர். அந்த ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு 99% அதிமுகவினரின் ஆதரவு தெரிவிக்கின்றனர். பன்னீர் செல்வத்திற்கு ஒரு சில பேரின் ஆதரவு மட்டுமே இதுவரை வந்திருக்கிறது. இதனால் கலக்கத்தில் இருக்கும் OPS தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போயிருக்கிறார்.


இந்த நிலையில் ஒற்றை தலைமை தொடர்பாக கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் அவர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட போது அங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் வந்திருந்தனர். அப்போது பேசிய அவர் அதிமுக எப்போதுமே வீழ்ந்ததாக சரித்திரமே கிடையாது, தற்போது அதை வீழ்த்த சிலர் முயல்கின்றனர். அந்த சூழ்ச்சிகளை முறியடிப்போம் அதிமுகவை எதிர்காலத்தில் ஒரு பலம் பொருந்திய கட்சியாக மாற்றுவோம் என அந்த வீடியோ காட்சியில் அவர் பேசியுள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இவர் சூழ்ச்சி செய்பவர் என சொல்வது பன்னீர்செல்வத்தை தானா என்று சிலர் யூகிக்க தொடங்கி விட்டனர்.