எரும சாணி என்ற யூடியூப் பக்கம் மூலம் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் தான் ஹரிஜா. இவருக்கு இப்போது டைவர்ஸ் என்று சமூக வலைத்தளத்தில் பரவலாக ஒரு பேச்சு அடிபடுகிறது. அதற்கு அவரது கணவர் ஒரு பதில் அளித்துள்ளார்.
கணவர் கொடுத்த பதில் என்னவென்றால் “எங்களுக்கு டைவர்ஸ் தான், ஆனால் நீங்கள் நினைக்கும் டைவர்ஸ் அல்ல இது வேற மாதிரியான ஒரு டைவர்ஸ்” என்று ஒரு போஸ்டரை வெளியிட்டார். அது என்ன போஸ்டர் என்றால் ஹரிஜாவும் மற்றும் அவரது கணவரும் சேர்ந்து நடிக்கும் ஒரு திரைப்படம். அதற்கு டைவர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் வருகிற மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டைவர்ஸ் போஸ்டரை அவர் வெளியிடும் போது “வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் என்ன விரும்புகிறார்கள் என்பதை நாங்கள் இருவரும் அறிவோம்” என பதிவிட்டுள்ளார்.
ஹரிஜா எருமசாணி யூடியூப் சேனல் மூலம் வீடியோக்களை பதிவிட்டு அதில் பிரபலமடைந்தவர் தான். அந்த நேரத்திலிருந்து இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இவர் சில ஆல்பம் சாங் மற்றும் ஷோர்ட்பிலிம்களிலும் நடித்திருக்கிறார். இப்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு இவர் தன்னுடைய கணவருடன் திரைபடத்தில் இணைகிறார். இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இவர்க்கு டைவர்ஸ் என்று பரப்பப்பட்ட வதந்திக்கு அவர் கணவரும் இல்லை என்று தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.