பாண்டியராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சத்தியராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, குக் வித் கோமாளி புகழ் போன்றோர்கள் நடித்து இன்று திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன்.
பெண்ணியம் பேசும் ஒரு வழக்கமான ஒரு தமிழ் சினிமா கதைதான், திரைக்கதையில் இயக்குனர் கொஞ்சம் மெருகேற்ற முயற்சித்திருக்கிறார். ஆனாலும் சில ஓட்டைகள் இருக்கத்தான் செய்கிறது.
படத்தின் கூடுதல் பலம் இசை என்று சொல்லலாம். இமான் அவர்களின் இசையில் பல இடங்களில் சாதாரண காட்சிகளையும் தூக்கிப் பிடித்துக் காட்டுகிறது. முக்கியமாக சண்டைக் காட்சிகளில் வேகமெடுக்க இமானின் இசையில் மிகவும் உறுதுணையாக உள்ளது.
ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது ஆக்சன் காட்சிகள் தான். 2 முதல் 3 இடங்களில் சண்டை காட்சி வருகிறது. சண்டை காட்சிகள் எல்லாவற்றிலும் தெலுங்கு பட வாடை மிகவும் தூக்கலாகவே அடிக்கிறது. படத்தில் வரும் குடும்ப காட்சிகள் மற்றும் காமெடி காட்சிகள் போரடிக்காமல் ஓரளவுக்கு டீசன்டாகவே நகர்கிறது.

ஆனால் கமர்சியல் படத்திற்கு உண்டான சில பல லாஜிக் மிஸ்டேக் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும் ஓகே சொல்லும் ரகம் தான். மேலும் தமிழ் சினிமா படங்களில் வழக்கமாக செய்யும் அதே தப்பை தான் இந்தப்படத்திலும் இயக்குனர் செய்து இருக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என தோன்ற வைக்கிறது. பல இடங்களில் வில்லன் வெறும் போன்கால் மூலமாகவே ஹீரோவிடம் உரையாடுகிறார். அதனால் வில்லனைப் பார்த்து “இவர் என்ன செய்து விடுவாரோ” என்று எந்த இடத்திலும் ஒரு துளி பயம் கூட வரவில்லை.
இப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் கிளைமேக்ஸ் காட்சியை யாரிடமும் சொல்லாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வேண்டுகோளுக்கிணங்க கிளைமாக்ஸ் காட்சிகளை பற்றி இந்த விமர்சனத்தில் எதுவும் சொல்லப்போவதில்லை.
சத்யராஜ் சரண்யா பொன்வண்ணன், சூரி, புகழ் பிரியங்கா அருள் மோகன் போன்றோர்கள் அவரவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களை நன்றாகவே செய்திருக்கிறார்கள். குறிப்பாக ஹீரோயின் பிரியங்கா அருள் மோகன் மற்றும் அம்மாவாக வரும் சரண்யா அவர்களின் காட்சிகள் குடும்ப ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.
மொத்தத்தில் எதற்கும் துணிந்தவன் படம் கமர்ஷியல் பட ரசிகர்களையும், குடும்ப ஆடியன்ஸையும் திருப்தி படுத்துமா என கேட்டாள். கண்டிப்பாக திருப்தி படுத்தும், பாண்டியராஜ் படத்தின் மாஜிக் இந்த படத்தில் ஒர்கவுட் ஆகியிருக்கிறது.
Kingwoods Rating :- 3/5