“நான் ஒரு இந்து, நான் இதுவரை மாட்டு இறைச்சி சாப்பிட வில்லை, ஆனால் நான் விரும்பினால் சாப்பிடுவேன்” என முன்னாள் முதல்வர் சித்தராமையா பரபரப்பை கிளப்பியுள்ளார்.

கர்நாடகாவில் மாட்டு இறைச்சிக்கு விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் “நான் ஒரு இந்து நான் இதுவரை மாட்டு இறைச்சி சாப்பிட வில்லை ஆனால் நான் விரும்பினால் சாப்பிடுவேன்” என முதல்வர் சித்தராமையா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான ஆளும் பாஜக அரசாங்கம் ஜனவரி 2021 பதவியேற்றது. மேலும் பசுக்களை பாதுகாக்க சட்டம் இயற்றியது. இந்த திட்டத்தின் மூலம் அனைத்து வகையான பசுக்களையும் காப்பதுதான் முக்கிய பங்காக இருந்தது இறைச்சிக்காக பசுக்களை வெட்டி வியாபாரம் செய்வதை சட்டவிரோதமாக்க நடவடிக்கைகளை எடுத்தனர்.

குறிப்பாக பசுக்கள், காளைகள், எருமைகள் இன்று எல்லா வகையான மாடுகளும் இந்த சட்டத்திற்கு கீழ் அடங்கும். ஆனால் 13 வயதுக்கு மேற்பட்ட எருமை மாடுகள் மற்றும் நோய் வாய்ப்பட்ட மாடுகள் இந்த சட்டத்திற்கு விதிவிலக்கு. மேலும் இந்த சட்டத்தை மீறுவோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை அபராதமும் அரசாங்கத்தால் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடத்தக்கது.

“நெஞ்சில் தைரியம் இருந்தால் என்னை கரூருக்கு வந்து தொட்டுப் பாருங்கள்” என திமுக அமைச்சருக்கு சவால் விட்ட அண்ணாமலை | காரணம் என்ன ?

கர்நாடகா மாநிலம் தும்குரு மாவட்டத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து பேசிய முன்னாள் முதல்வர் சித்தராமையா “ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் பல்வேறு மதங்களைப் பின்பற்றும் மக்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்துகிறது. மேலும் மாட்டு இறைச்சி உண்பவர்கள் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்ல. நான் ஒரு இந்து நான் இதுவரை சாப்பிட்டதில்லை ஆனால் எனக்கு தேவைப்பட்டால் நான் சாப்பிடுவேன் அதைத் தடுக்க நீங்கள் யார். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் மாட்டிறைச்சியை சாப்பிடுவார்கள். ஒருமுறை கர்நாடக சட்டசபையில் இதை தான் சொல்லியிருக்கிறேன். மாட்டிறைச்சி சாப்பிட வேண்டாம் என்று சொல்ல நீங்கள் யார் ? என கடுமையாக தற்போதைய முதல்வரை தாக்கி பேசி இருக்கிறார் சித்தராமையா.

Spread the love

Related Posts

வாடகைக்கு விடப்படும் ஆண்கள், இளம்பெண்களுக்கென்று பெங்களூரு கன்னடாவில் ப்ரத்யேகமாக தொடங்கப்பட்ட ஆப்

பணம்.. பணம்.. பணம்.. எது தேவையோ, பணம் இருந்தால் போதும். இது நிறைவேறும். பொருட்கள் வாங்குவது

“படுக்கையறை காட்சியில் நடித்து ரசிகர்களை குஷி படுத்துவேன்” ஓப்பனாக பேசி அதிர்ச்சியை கிளம்பியுள்ள ராஷி கண்ணா

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷி கன்னா. இவர் தமிழில்

காமெடி நடிகர் போண்டாமணிக்கு தீடீர் இதயக்கோளாறு | மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

வடிவேலுவுடன் பல படங்களில் அவருக்கு இணையாக நடித்த காமெடி நடிகர் போண்டாமணிக்கு இதயத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால்