நமக்கு வரும் கனவுகளை பற்றி சில முக்கியமான தகவல்கள் | கனவுகளுக்கு அர்த்தம் என்ன

நாம் வாழ்க்கையில் சாப்பாடு, வீடு, உடை, வேலை இது மாதிரி அத்தியாவசியமான நிறைய விஷயங்கள் இருக்கிறது. இதெல்லாம் இருந்தால் தான் நாம சந்தோஷமான ஒரு வாழ்க்கையை வாழ முடியும் இப்ப சொன்ன இந்த சந்தோஷங்களை நாம தேடிப்போய் தான் சம்பாதிக்க முடியும். ஆனா நம்ம வாழ்க்கையில தான் நம்மள தேடி வந்து சந்தோஷத்தை கொடுக்கிறது கனவுகள் தான்.

பயம் திகில் சந்தோஷம் கஷ்டம் என தூக்கத்திலேயே நமக்கு பல விதமான உணர்வுகளை கொடுக்கிற இந்த அற்புதமான கனவுகளைப் பற்றிய ஒரு பதிவை தான் இப்போது நாம் பாக்க போறோம். தூங்கும் போது சிலருக்கு அவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாலும் கண்கள் திறந்தவாறு கண்மணிகள் நகர்ந்து கொண்டே இருக்கும். இதற்கு Rapid Eye Movement என்று சொல்வார்கள். இது ஒருவர் தூங்கும் நேரத்தை அதிகரிக்க ஏற்படுகிறது என்றும் சொல்கிறார்கள். முக்கியமாக இது ஒரு கனவு காணும் பொழுது தான் ஏற்படுகிறது என்றும் கூறுகின்றனர். கனவு காணும் பொழுது உடம்பு அசைந்து கனவுகல் ஏற்படுகிறது என்றும் கூறுகின்றனர்.

ஆனால் சிலர் இன்சப்ஷன் திரைப் படத்தில் வருவது போன்று கனவுகளில் நீண்ட தூரம் பயணிப்பதால் தங்களை மீறி உடல் அசைவுகள் ஏற்படுவதால் கை கால்களை உடைத்து கொண்டுள்ளனர். சிலர் கனவுகளில் ஏற்படும் தாக்கத்தினால் கட்டில் சோபா மேஜை போன்ற பொருட்களையும் உடைத்துள்ளனர். இன்னும் சிலர் உடன் தூங்குபவர்களை பயங்கரமாக தாக்கி உள்ளனர். இதில் மிக முக்கியமாக ஒருவர் அவருடைய கனவில் ஏற்பட்ட தாக்கத்தினால் தன்னுடைய வீட்டை எரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சில நேரங்களில் நாம் காணும் கனவுகளில் நமக்கு கொஞ்சம் கூட பரிச்சயமில்லாத முகங்களை பார்ப்பதும் அவருடன் உரையாடுவது போன்று இருக்கும்.

கண் விழித்த பின் யோசித்தால் அவர்கள் யார் என்று நமக்கு தெரியாது இது பற்றிய ஆராய்ச்சியில் என்ன கூறுகிறார்கள் என்றால் நம் வாழ்நாளில் நாம் எத்தனையோ லட்சக்கணக்கான முகங்களை படங்களில் நாம் நடமாடும் வீதிகளில் நாம் பயணிக்கும் பல இடங்களில் பார்க்கிறோம் இவைகளில் சில நமது மூளையில் பதிந்து விடுகின்றன என்றும் என்றாவது ஒருநாள் நமது கனவில் அவர்களின் முகம் கொண்ட கதாபாத்திரம் வரும் என்றும் கண் விழித்த பின் கண்டிப்பாக அவர்களை நாம் அடையாளம் காண முடியாது என்றும் கூறுகின்றனர். சரி இப்போது நாம் பார்த்த சில விஷயங்கள் நம் அன்றாட வாழ்வில் நாம் பார்த்த மனிதர்கள் நாம் பார்த்து அனுபவித்த சில அனுபவங்களால் நமக்கு கனவுகளில் ஏற்பட்ட நிகழ்வுகளை பற்றித்தான். பிறந்ததிலிருந்தே கண்பார்வை இல்லாத சிலருக்கு எப்படி கனவுகள் வரும் கனவுகளில் அவர்கள் என்ன பார்ப்பார்கள் என்பதை பற்றிதான்.

பிறப்பிலிருந்தே கண்பார்வை இல்லாதவர்களும் கனவு காண்பார்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் காணும் கனவுகள் ஆடி ட்ரீம்ஸ் எனப்படும் சப்தங்கள் சார்ந்த கனவுகளாக தான் இருக்கும் என்று கூறியுள்ளனர். பிக்சர்ஸ் இமேஜஸ் போன்று எந்த காட்சிகளும் இல்லாமல் வெறும் சந்தங்களில் அவர்கள் கனவு காண்பார்கள் என்று கூறியுள்ளனர்.

premonition dreams எனப்படும் முன்னெச்சரிக்கையாக வரும் கனவுகள், இதில் சிலருக்கு கெட்ட சகுணம் சம்பவங்கள் நடப்பதை முன் கூட்டியே காண்பிக்கும்படி கனவுகள் வருவதாக கூறி, இந்த வகை கனவுகளின் தாக்கம் சுபகான்சியஸ் எனப்படும் அடி மனதில் பதிந்து இருப்பதால் ஏதோ தீயசெயல் நடக்கவிருக்கிறது என்ற எண்ணம் அவர்களை பெரிதும் ஆக்கிரமிக்கும். சிலருக்கு இது உண்மையில் நடந்திருக்கிறது என்றும் கூறுகின்றனர். டைட்டானிக் கப்பல் மூழ்கியது தீவிரவாத தாக்குதல்களால் அனல் அந்த சம்பவங்கள் நடப்பதற்கு முன்னரே சிலர் கனவுகளில் வந்திருக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனால் இது பெரும்பாலும் நடப்பது சாத்தியமில்லை என்பதால் இது போன்ற கனவுகள் வந்தால் அதை நினைத்து வருந்த வேண்டாம் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பெரும்பாலும் 90 சதவிகித கனவுகள் நான் கண் விழித்த 5 நிமிடங்களில் மறந்து விடும் என்கிறார்கள். சில கனவுகள் பல சாதனைகள் புரிய உதவியுள்ளது. தையல் மிஷின் கண்டுபிடிப்பு மற்றும் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அவர்களின் கனவில் வந்த கதைதான் அவர் பின்னாளில் படமாக எடுத்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் டெர்மினேட்டர். மற்றும் லாரி பேஜ்யின் கூகிள், ஐன்ஸ்டீன் தியரி ஆப் ரிலேட்டிவிட்டி இவை அனைத்தும் அவர்களுக்கு கனவுகளாக வந்தது என்பது தான்.

Spread the love

Related Posts

மற்றுமொரு முறை பிரிட்டிஷிடம் சரணடைந்த இந்தியா | இங்கிலாந்து சட்டையை கிழிப்போம் என வாய் உதார் விட்டு தற்போது அவர்கள் வாயையே புண்ணாக்கி கொண்டனர்

இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி ஆட்டத்தை வென்றது.

ஆசை கணவனுக்காக ஆச்சர்ய பரிசு அளிக்கப்போகும் நயன்தாரா | இவ்ளோ பெரிய வீடா ? அதுவும் ரஜினி இல்லத்தின் அருகில்

ரஜினிகாந்தின் இல்லத்திற்கு அருகே நடிகை நயன்தாராவின் பிரம்மாண்டமான வீடு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. நடிகை நயன்தாரா

x