திருவண்ணாமலையில் விநாயகர் கோவிலுக்கு முன்னால் சாமியார் ஒருவர் மது அருந்திய புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை தந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆன்மீக சுற்றுலா தளங்களில் மிகவும் முக்கியமான ஸ்தலம் தான் திருவண்ணாமலை. இங்கு இருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு கடல் கடந்து வரும் பக்தர்களும் அதிகம். கிரிவலத்திற்கு மிகவும் பேர் போன ஊர் தான் திருவண்ணாமலை. அதோடு அந்த கோயிலை சுற்றி நிறைய கூக்கோவில்கள் அமைக்கப்பட்டிருக்கும். மேலும் ஆசிரமங்கலும் நிறைந்து கிடக்கும். இந்த அளவிற்கு புகழ் பெற்ற ஒரு ஆன்மீக நகரமாக திகழ்கின்ற திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான சாமியார்களும் துறவிகளும் தங்கி இருக்கின்றனர்.

இவர்கள் கோயிலின் அருகில் இருக்கும் மடம், ஆசிரமங்கள், தங்கும் விடுதி போன்ற இடங்களில் தங்கியிருக்கின்றனர். இப்படிப்பட்ட ஆட்களுக்கு தினமும் காலை மாலையில் டீ, மூன்று வேளை சாப்பாடு, மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக் ஒருமுறை என ஆசிரமங்கள் தங்கும் விடுதி போன்ற இடங்களில் தங்கியிருக்கின்றனர். இப்படிப்பட்ட ஆட்களுக்கு மாதம் ஒரு முறை என பக்தர்களால் காவி உடைகள் வழங்கப்படுகிறது. இதனால் அந்த கிரிவலப் பாதையில் சாமியார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களுள் போலி சாமியார்களும் ஊடுருவி வருகின்றனர்.
தற்போது எந்த திருவண்ணாமலையில் திருஉடல் தெருவில் திருமஞ்சன கோபுரம் எது கற்பக விநாயகர் கோவில் ஒன்று அமைந்திருக்கிறது. அங்கு அந்த கோவிலுக்கு வெளியே சாமியார் ஒருவர் மது குடிப்பது போல் புகைப்படம் வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நள்ளிரவு நேரத்தில் மது பாட்டில் சோடா மிக்சர் ஆகியவற்றை கோயில் வழியில் வைத்து மது போதையில் நிலைகுலைந்தபடி அந்த சாமியார் காணப்படுகிறார். இப்படி தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் போலிச் சாமியார்களை பிடிக்கவேண்டும் என திருவண்ணாமலை மக்கலும் ஆன்மீக பெரியோர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.