நேற்று சென்னை அணி வெற்றி பெற கடைசி ரன்களை அடித்து அந்த வெற்றியைப் பெற்றுத் தந்த தோனியின் ஆட்டத்தை டிவியில் கண்டு மகிழ்ந்த ஒரு குடும்பத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நேற்று மும்பை மற்றும் சென்னை அணிகள் ஐபிஎல் விளையாட்டில் மோதியது முதலில் பேட் செய்த மும்பை அணி 154 ரன்கள் மட்டுமே எடுத்தது பின்பு இரண்டாவது பேட்டிங் செய்த சென்னை அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் தோனி கடைசியில் ஆட்டத்தை சென்னை வசம் முடித்து வைத்தார். இதில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது அப்போது களத்தில் இருந்த தோனி ஒரு சிக்சர் இரண்டு 4 என்று அடித்து அந்த ஆட்டத்தை சென்னை பக்கம் திருப்பினார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னை அணிக்காக தோனி ஆட்டத்தை முடித்து வைப்பது பார்த்து தோனி ரசிகர்கள் மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் ஆரவாரத்தில் குவித்தனர். அதிலும் இந்த ஆட்டம் மும்பை அணிக்கு எதிராக வந்துள்ளதால் அவர்கள் இன்னும் உற்சாகமாக இருக்கின்றனர். ஏனென்றால் சென்னை மற்றும் மும்பை அணிகள் ஐபிஎல் இல் எதிரும் புதிருமான இரு அணி.

அந்த அணிக்கு எதிராக இந்த சிறப்பான ஆட்டம் வெளிவந்ததால் ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தனர். அதே போல ஒரு வீட்டில் தோனியின் ஆட்டத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தார் கடைசியில் தோனி அடித்த அந்த பவுண்டரி பார்த்ததும் சென்னை வெற்றியடைந்ததை அடுத்து சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தனர் இந்த வீடியோவை தோனி ரசிகர்கள் இணையதளத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.
தோனியோட வெற்றி அவரோடது மட்டும் இல்ல மக்களோட வெற்றி…#CSK𓃬 #CSK #MSDhoni #MSDhoni𓃵 #MSD #ChennaiSuperKings #CricketTwitter pic.twitter.com/rPgUKhGNST
— கடலூர் த.பிரேம் (@cudnews18) April 22, 2022