“வேதநாயகம்ன்னா பயம்” இந்த வசனத்திற்கு சொந்தக்காரரான வில்லன் நடிகர் சலீம் கவுஸ் காலமானார் | சின்ன கவுண்டர், வேட்டைக்காரன், ரெட் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர்

சின்னகவுண்டர் வேட்டைக்காரன் உட்பட பல படங்களில் நடித்த பிரபல தமிழ் சினிமா வில்லன் நடிகர் சலீம் கவுஸ் காலமானார்.

பிரபல நடிகரான சலீம் கவுஸ் மும்பையில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 70 ஆகும் இவருடைய இறுதி சடங்குகளும் இன்று நடைபெற்றது. இதுகுறித்து அவரது மனைவி பேசுகையில் :- “அவருக்கு கடந்த புதன்கிழமையில் இருந்து மார்பகத்தில் வலி இருந்திருக்கிறது, அதனால் மாரடைப்பு காரணமாக அவர் இன்று காலை உயிரிழந்து விட்டார். அவர் இறப்பதற்கு முன்பு யாரையும் சார்ந்து இருக்கவில்லை, யாரையும் தொந்தரவு செய்யவில்லை, சுயமரியாதையை கடைபிடிப்பவர், அதேபோன்று யாருக்கும் துன்பம் அழிக்காமல் அவராகவே சென்று விட்டார். அவர் தற்காப்பு கலை தெரிந்தவர், நடிகராகவும், இயக்குனராகவும் தமிழ் சினிமாவிலும் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் வலம் வந்தவர் அவருக்கு சமையல் கலையிலும் ஆர்வம் உள்ளது” என கூறியுள்ளார்.

நடிகர் சலீம் கவுஸ் 1978ஆம் ஆண்டு இந்தியில் வெளியான சுவர்க்க நரக படத்தில் நடித்ததன் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமானார். இவர் என்னதான் ஹிந்தியில் அறிமுகமானாலும் தமிழில் இவரை தெரியாத ஆட்களே இருக்க முடியாது விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர் படத்திலும், மணிரத்னம் இயக்கிய திருடா திருடா படத்திலும், அஜீத் நடித்த ரெட் படத்திலும், விஜயின் வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர்.

இவர் வேட்டைக்காரன் படத்தில் பேசிய “வேத நாயகம் ன்ன பயம்” என்ற வசனம் இன்றளவும் பிரபலமான ஒன்றாகும். இவருடைய வில்லத்தனமான நடிப்பிற்காகவே அந்த படத்தை பார்த்தவர்கள் ஏராளம். அப்படிப்பட்ட ஒரு நடிகர் இன்று நம்முடன் இல்லை என்று நினைக்கும் போது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இவரின் இழப்பு இந்திய சினிமாவிற்கு ஒரு பெரிய இழப்பாக இருக்கும்.

Spread the love

Related Posts

Viral Video | ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் மனைவியை பணி செய்யவிடாமல் முக்கிய கோப்புகளில் கையெழுத்திடும் திமுக பிரமுகரான கணவர்

விரலி மலையில் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் மனைவிக்கு பதிலாக முக்கிய கோப்புகளில் கணவர் கையெழுத்திடும்

ஜெய்பீம் பட விவகாரத்தில் சூர்யா, ஜோதிகா மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஜெய்பீம் பட விவகாரத்தில் சூர்யா ஜோதிகாவுக்கு வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சூர்யா

நடிகையின் ஆபாச வீடியோ வெளியிட்ட நபரை தட்டி தூக்கிய போலீஸ், வைரலான வீடியோ

முன்னணி தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ். சில படங்களில் ஹீரோயினாகவும் பல படங்களில் கவர்ச்சி வேடங்களிலும்