இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற உள்ள ஒரு நாள் போட்டி டிக்கெட் வாங்க அதிகாலை முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் திறந்துள்ளனர்.

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஏற்கனவே டெஸ்ட் போட்டிகள் முடிந்து இந்தியா வெற்றி பெற்ற நிலையில் முதல் ஒரு நாள் போட்டி நேற்று மும்பையில் நடைபெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை விசாகப்பட்டினத்திலும் மூன்றாவது ஒருநாள் போட்டி வருகின்ற 22-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற உள்ள மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு நேரடி டிக்கெட் விற்பனை இன்று நடைபெற உள்ள நிலையில் அதை வாங்குவதற்கான ஏராளமான ரசிகர்கள் இரவு முதல் மைதானத்தின் வெளியே உள்ள சாலையில் காத்திருக்கின்றனர்.

மொத்தமாக 36,000 இருக்கைகள் கொண்ட சேப்பாக்கம் மைதானத்தில் C,D,E பிரிவுகள் தவிர மற்ற கேலரிகளின் இருக்கைகளுக்கு கடந்த 13ஆம் தேதி ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. ஆன்லைனில் டிக்கெட் விற்பனை தொடங்கியதும் அந்த மொத்த டிக்கெட்டும் ஒரே நாளில் விற்று தீர்ந்தது. இந்த நிலையில் குறைந்த பட்ச விலையான 1200 ருபாய் கொண்ட இருக்கைகள் மட்டும் இருக்கின்றது. அந்த இருக்கைகளுக்கான டிக்கெட் மட்டும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.
இதற்காக நேற்று இரவு முதலே 11 மணி 12 மணி முதல் வெளியே இருக்கக்கூடிய அந்த சாலையில் காத்திருக்கின்றனர். இன்று காலை 11 மணிக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு முதலில் இந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நீண்ட வரிசையில் டிக்கெட் வாங்குவதற்காக காத்திருக்கின்றனர். மொத்தம் 5110 இருக்கைகளுக்கு டிக்கெட் விற்பனையாகி வருகிறது. ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட் மட்டுமே வழங்கப்படுகிறது.
More than 2 kilometres of line at #Chepauk for tickets to the third ODI.#India #INDvsAUS #Trending pic.twitter.com/9G2Vt427Z0
— Backchod Indian (@IndianBackchod) March 18, 2023