சற்றுமுன் | ரசிகர்களை சந்தித்து விட்டு சென்ற விஜய்க்கு 500 ரூ அபராதம்

நடிகர் விஜயின் காருக்கு ரூபாய் 500 அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அதிரடி உத்தரவு.

பல வருடங்கள் கழித்து விஜய் அவர்கள் தனது ரசிகர்களை சந்திக்க பனையூரில் இருக்கும் அவரது அலுவலகத்திற்கு சென்றார். அப்போது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டனர். அவர்களை எல்லாம் சந்தித்து விட்டு மேலும் அவர்களுக்கு பிரியாணியும் பரிமாறி விட்டு ரசிகர்களுக்கு நல்ல நல்ல கருத்துக்களையும் பகிர்ந்து குடும்பத்தின் மேல் அக்கறை செலுத்துங்கள் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் நடிகர் விஜய்.

அப்போது அவரின் கார் வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அந்த காரின் கார் கண்ணாடியில் கருப்பு நிற ஸ்டிக்கர் இருக்கும் பிலிம் ரோல் ஒட்டியதாக எழுந்த புகாரின் பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி அவரின் காருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தனர். விஜய் மக்கள் இயக்கம் ஆலோசனை கூட்டத்திற்கு வந்த நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதித்து அனுப்பியது தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Spread the love

Related Posts

“மதுரை ஆதீனம் ஒரு தேசியவாதி அவர் அரசியல் பேசுவதில் எந்த தவறும் இல்லை”- சீமான்

செய்தியாளர்களிடம் பேசிய சீமான் அவர்கள் மதுரை ஆதினம் ஒரு தேசியவாதி அவரை அரசியல் பேசக்கூடாது என்று

ஒரு வருடம் கழித்து மணிமேகலையை பழிவாங்கிய Rakshan

குக் வித் கோமாளி சீசன் 3 தொடங்கி மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் பழைய

எதற்காக இந்திய அணியில் கேப்டன்கள் மாறிக்கொண்டே வருகின்றனர் ? | கங்குலி அளித்த விளக்கம்

இந்திய அணியில் கேப்டன்கள் மாதம் ஒருமுறை மாறி வருகின்றனர். கடந்த நாலு மாதங்களில் மட்டும் இந்தியாவில்