யூடூப்பில் புட் ரிவியூ செய்யும் இர்பான் திருமணம் நிறுத்தம் | அவராகவே வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

யூடியூப் சேனல் மூலம் உணவுகளை ரிவ்யூ செய்து அதன் மூலம் பிரபலமான ஒரு யூடியூபர் தான் இர்பான். இவர் பலதரப்பட்ட ஓட்டல்களுக்கு சென்று அங்கு உள்ள உணவுகளை சாப்பிட்டு தர வரிசைப்படி ரேட்டிங் கொடுத்து ரிவ்யூ செய்வார். இவரை தெரியாத ஆட்களே இல்லை என்றுதான் சொல்லவேண்டும் அப்படிப்பட்ட பிரபலமான ஒரு நபர் தான் இந்த இர்பான்.

இவர் சமீபத்தில் அவருடைய யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை பதிவிட்டு இருந்தார் அதில் அவர் கூறியது என்னவென்றால் எல்லோரும் அடிக்கடி என்னுடைய திருமணம் எப்போது நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதே, சீக்கிரம் திருமண தேதியை சொல்லுங்கள், இல்லையென்றால் திருமணம் தள்ளி வைக்கப்பட்டதா அதையாவது சொல்லுங்கள் என்று அடிக்கடி கேள்வி எழுப்பிக் கொண்டு வந்தனர்.

இதற்காக அவரின் ரசிகர்களுக்கு ஒரு பதில் அளிக்க வேண்டும் என்று இப்போது அவர் ஒரு தகவலை தெரிவித்துள்ளார. அது என்னவென்றால் நான் எனது திருமணத்தை தள்ளி வைக்கவில்லை அந்த திருமணம் நின்று விட்டது, ஆமாம் நிச்சயதார்த்தத்திற்கு சென்ற திருமணம் தற்போது நின்றுவிட்டது தள்ளி வைக்கப்படவில்லை, எங்கள் இருவருக்கும் புரிதல் கொஞ்சம் குறைவாக இருந்ததாக நாங்கள் எண்ணினோம்.

அதனால் வீட்டில் எல்லோருடைய காலில் விழுந்து அந்த திருமணத்தை எப்படியோ நான் நிறுத்திவிட்டேன். அதனால் இனிமேல் திருமணத்தை பற்றி என்னுடன் உரையாடவேண்டாம் வேறு ஏதேனும் ஜாலியான விஷயங்களை நாம் பேசலாம். அதனால் என் திருமணம் பற்றி எந்த விஷயமும் இனி பேசுவதற்கு இல்லை என்று திட்டவட்டமாக அவர் ரசிகர்களுக்கு கூறினார். மேலும் அவருக்கு தற்போது அவரின் ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Spread the love

Related Posts

Viral Video | மத்திய பிரதேசத்தில் 2 வயது சிறுவனை பணிப்பெண் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது

மத்திய பிரதேச மாநிலத்தில் இரண்டு வயது சிறுவனை பணிப்பெண் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள்

கள்ளக்குறிச்சியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம்

கள்ளக்குறிச்சியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அந்த உடலை மறு உடல் கூறாய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம்

கர்ப கால போட்டோ வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்திய காஜல்

நடிகை காஜல் அகர்வால் ஒரு தொழிலதிபரை கல்யாணம் செய்து கொண்டு படத்தில் நடிப்பதில் இருந்து அவ்வப்போது