பீகாரில் ஒரு கால்நடை மருத்துவரை கடத்தி வந்து பெண்ணின் குடும்பத்தினர் துப்பாக்கி முனையில் அவரை மிரட்டி பெண்ணுக்கு தாலி கட்ட செய்தனர்.
பீகார் மாநிலத்தில் பெகுசராய் மாவட்டத்தில் பசுமாடு ஒன்றுக்கு உடல்நிலை சரியில்லை என கூறி கால்நடை மருத்துவரை வீட்டிற்கு வரவழைத்து, அவருக்கே தெரியாமல் அவரை துப்பாக்கி முனையில் மிரட்டி பெண் விட்டார் அந்த பெண்ணுக்கு இவர் மூலம் கட்டாய திருமணம் செய்து வைத்தனர். இந்த விஷயத்தை அறிந்து அந்த மணமகனின் தந்தை காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியது என்னவென்றால் எனது மகனை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து மறுநாள் காலையில் எனது செல்போனுக்கு ஒரு வீடியோ ஒன்று வந்தது.

அதில் எனது மகன் மணக்கோலத்தில் ஒரு பெண்ணின் அருகில் உட்கார வைக்கப்பட்டு அந்தப் பெண்ணுக்கு கட்டாய திருமணம் நடைபெற வைத்துள்ளனர். இதைப் பார்த்த உடனே எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவனுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தார்கள். அதனால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அதற்கு உண்டான விசாரணையை தொடங்கி வைத்தனர். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தத் தந்தைக்கு உறுதி அளிக்கப்பட்டது. பீகார், ஜார்கண்ட் மட்டும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் கட்டாய திருமணம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை “ஜாப்ரிய விவாஹா” என அழைக்கின்றனர்.

बिहार के बेगूसराय में मंगलवार को बीमार पशु की जांच के लिए बुलाए गए पशु चिकित्सक को तीन लोगों ने अगवा कर जबरन शादी कर ली. #bihar #viralvideo #kidnapped #marriage #atrangire #lalluramnews #lalluram pic.twitter.com/6lLbMmER7g
— Lallu Ram (@lalluram_news) June 15, 2022