பிரதமர் மோடியின் தலைமையிலான இந்திய அரசு சீனா அரசின் 54 செயலிகளை பிப்ரவரி 14ஆம் தேதி தடை செய்தது. அந்த 54 செயலிகளில் ஃப்ரீ ஃபயர் கேம் அடங்கும்.
சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு உள்ள நிறுவனம்தான் சீ (sea) நிறுவனம் இந்த நிறுவனம் தயாரித்த செயலி தான் இந்த ஃப்ரீ ஃபயர் அல்டிமேட்டம். இந்த ஃப்ரீ ஃபயர் கேம் இந்தியாவில் தடைபட்டதால் பங்குசந்தையில் ஒரே நாளில் 16 பில்லியன் டாலர்களை இழந்துள்ளது இந்த நிறுவனம். இந்த சீ நிறுவனத்தின் பங்கு சந்தை வீழ்ச்சி இந்தியாவில் ஃப்ரீ ஃபயர் கேம் ஐ தடைசெய்ததனாள்தான் தொடங்கியுள்ளது. எனவே இது மிகப்பெரிய ஒரு பங்கு சந்தை வீழ்ச்சியாக அந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.
இந்த ஃப்ரீ ஃபயர் செயலிக்கு முக்கியமாக அதிக பயனாளர்கள் இருப்பது இந்தியாவில் தான் இப்போது இந்தியாவில் இந்த செயலியை பயன்படுத்த தடை விதித்ததால், சீ நிறுவனத்துக்கு இப்போது வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்வது மிகவும் கடினமான முயற்சியாக இருக்கும். மத்திய அரசு ஃப்ரீ ஃபயர் விளையாட்டு தடை செய்தது மட்டும் இல்லாமல் அடுத்தது அதே நிறுவனத்தின் மற்றொரு செயலியான ஷாபி (Shopee) செயலியையும் விரைவில் தடை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.