கொரோனா தடுப்பூசி போட்டதால் தனது மகள் சுயநினைவு இல்லாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார் என தந்தை குற்றம் சாட்டிய சம்பவம் தற்போது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் உள்ள பருத்திப்பாட்டை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மகாராஜன். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் இளைய மகள் தான் நல்ல தாய். ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் இப்போது சுயநினைவு இல்லாமல் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டதால் தான் தனது மகளுக்கு இது போன்று உடல்நிலை சிக்கல் ஏற்பட்டிருக்கிறது என தந்தை மகாராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
டி20 உலக கோப்பைக்கு களம் இறங்கும் இந்திய அணி வெளியானது | யார் யார் டீமில் உள்ளனர் ?
இது குறித்த அவர் பேசும்போது என்னுடைய மகள் தேர்வெழுதி கொண்டிருக்கும்போது அவளுக்கு பள்ளியில் கொரோனா தடுப்பு ஊசி போட்டனர். அதன் பிறகு உடல் பாதிப்பு ஏற்பட்டது. வழக்கமாக தடுப்பூசி போட்டால் காய்ச்சல் வரும் என்பதால் நாங்களும் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் நாளுக்கு நாள் அவர்களுடைய உடல் நிலை மிகவும் மோசமானது. பல்வேறு சிகிச்சைகள் எடுத்து பார்த்தோம் பயனளிக்காத நிலையில் இறுதியாக நெல்லை அரசு மருத்துவமனையில் அவளை அனுமதித்தோம். தற்போது அவள் சுயநினைவு இல்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தடுப்பூசி போட்ட பிறகுதான் என்னுடைய மகளுக்கு இப்படி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு எனது மகளை காப்பாற்றி தர வேண்டும் என கண்ணீருடன் கூறி வருகிறார். இது குறித்து அவரது சகோதரி கூறும் போது என்னைவிட என்னுடைய தங்கை ஆரோக்கியத்துடன் இருப்பவள். தடுப்பூசி போட்ட பிறகு திடீரென அவர் சுயநினைவின்றி உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறாள். அவள் மருத்துவமனையில் இருப்பதால் என்னாலும் கல்லூரிக்கு செல்ல முடியவில்லை. எனது அப்பாவும் வேலைக்கு செல்ல முடியாமல் குடும்பமே கஷ்டத்தில் இருக்கிறது.
இது குறித்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் ரவிச்சந்திரன் கூறியதாவது :- “மாணவியின் மூளையில் காசநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் தான் அவர் இந்த அளவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். மற்றபடி கொரோனா தடுப்பு ஊசியால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவில்லை. தொடர்ந்து அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருகிறோம்” என்று கூறினார். கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு தான் என் மகளுக்கு இம்மாதிரியான பிரச்சனைகள் வந்து சுயநினைவின்றி இருக்கிறார் என்ற அப்பாவின் இந்த குற்றம் சாட்டல் மருத்துவ வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
