ராஜஸ்தான் மாநிலத்தில் இளம் பெண் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கிய ஒரு வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பனஸ்வாரா என்ற இடத்தில் ஒரு இளம் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அவரை துடிக்க துடிக்க சரமாரியாக தாக்குகின்றனர். இந்த வீடியோவை டிவிட்டரில் வெளியிட்ட பிஜேபி பிரமுகர் ஒருவர் ராஜஸ்தானில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை பாருங்கள் என காங்கிரசாரை கேட்டுள்ளார். ஏனென்றால் தற்போது ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி தான் நடைபெறுகிறது மேலும் அவர் ஒரு பெண்ணுக்கு இப்படி நடக்கிறது நான் அதை தட்டிக் கேட்கலாமா எனவும் ராஜஸ்தானின் இந்தியன் நேஷனல் காங்கிரஸ், ஜெனரல் செகரட்டியான பிரியங்கா காந்தியை டேக் செய்து கேட்டுள்ளார்.

இந்த வீடியோவில் இருக்கும் அந்தப் பெண்ணை மரத்தில் கட்டி அடிப்பது அவருடைய கணவர் தான் என தகவல் வந்திருக்கிறது. அவருடைய மனைவி வேறு ஒரு வாலிபனுடன் ரோட்டில் நெருக்கமாக நடந்து சென்றுள்ள விஷயத்தை கணவன் கேள்விப்பட்டதால் மனைவியை மரத்தில் கட்டி வைத்து அடித்ததாக கூறுகின்றனர். இந்த விஷயத்தை அறிந்த போலீசார் தகவல் அறிந்த அங்கு சென்றதும் அந்த நபர் தப்பித்து ஓடியதாகவும் பின்பு அவரை தேடிப் பிடித்து கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். இளம் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்த இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

राजस्थान के बाँसवाड़ा में एक महिला के साथ अत्याचार की पराकाष्ठा देखिए @priyankagandhi जी
— Laxmikant bhardwaj (@lkantbhardwaj) July 30, 2022
यही है लड़की हूँ लड़ सकती हूँ ? pic.twitter.com/JnGA9Ynj6R