டெல்லியில் உள்ள ஷிப்ரா ரிவியரா சொசைட்டியின் நான்காவது மாடியில் வசிக்கும் 45 வயதான ஒரு பணிப்பெண் வீட்டின் பின்புறமாக சென்று அந்தரத்தில் நின்று கொண்டு தன் உயிரைப் பணயம் வைத்து ஜன்னலை துடைக்கும் வீடியோ காட்சியானது வைரலாக இணையதளத்தில் பரவி வருகிறது.
இந்த சம்பவத்தை அந்த வீட்டுக்கு எதிர் வீட்டில் இருக்கும் சுருதி என்ற பெண் போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார் .
இதுகுறித்து சுருதி செய்தியாளர்களிடம் பேசுகையில் :- “நான் என் வீட்டில் இருந்து அந்த சம்பவத்தை பார்த்ததும் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நான் எவ்வளவு முறை அவரை அழைத்தும் அவர் என்னை திரும்பிப் பார்க்கவில்லை, அதனால் இந்த சம்பவத்தை நான் போனில் வீடியோ எடுத்தேன். இதை நம் சமூக வலைத்தளத்தில் பரப்புவதன் மூலம் பல பேருக்கு எவ்வளவு ஒரு கடினமான வேலை என்று தெரியும். அதனால் இந்த மாதிரியான வேலைகளில் யாரையுமே ஈடுபடுத்தக் கூடாது என்பதற்காகத்தான் இந்த வீடியோவை நான் எடுத்தேன்” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.