கேரள மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்டதால் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதில் மேலும் 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் காசர்கோடு அருகே செருவத்தூரில் உள்ள உணவகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை, கெட்டு போன மாமிசத்தை வைத்து செய்யப்பட்ட ஷாவ்ர்மாவை சாப்பிட்டாதால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இவரைப்போலவே சக மாணவர்கள் அதை வாங்கி சாப்பிட்ட சிறிது நேரத்தில் அனைவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

கடுமையான காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தேவானந்தாவை மருத்துவமனையில் அனுமதித்த போது, அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். மற்ற 14 மாணவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாக அங்குள்ள மருத்துவமனையில் கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேலும் சுகாதாரத்துறையினர் தெரிவித்ததால் சவர்மா சாப்பிட்டதால் தான் மாணவி உயிரிழந்த இருப்பதாக உறுதி செய்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உணவு பாதுகாப்பு ஆணையருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த உணவகத்திற்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.