உத்திரபிரதேசத்தில் மாப்பிள்ளை கருப்பாக இருப்பதாக கூறி மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 9ஆம் தேதி பெண் ஒருவருக்கு பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்டது. அந்த திருமண விழாக்களில் ஒன்றான ஜெயிமாலா என்னும் மாலை மாற்றிக் கொள்ளும் சடங்கு அப்போது நடந்தது. அப்போது தான் மணமகள் முதல் முறையாக மணமகனை நேரில் சந்தித்ததாக கூறப்படுகிறது.
இங்கு மணமகனை பார்த்தவுடனே தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் இவர் இல்லை மாப்பிள்ளை வேறு ஒருவராக இருக்கிறார் என கூறி அந்த திருமணத்தை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் என நிராகரித்தார். மேலும் இது குறித்து பெண் வீட்டாரிடம் கேட்டபோது அவர்தான் தற்போது மணமகனாக இருக்கும் மாப்பிள்ளை மேலும் மணமகள் வீட்டார் வேறு ஒரு போட்டோவை காட்டி எங்களை ஏமாற்றி விட்டனர் என குற்றம் சாடினார்.
“என்னுடைய இறப்பிற்கு போலீஸ் தான் காரணம்” என வீடியோவில் உருக்கமாக பேசி தற்கொலை செய்து கொண்ட மாணவன்

இந்த இரண்டு தரப்பினரும் நீண்ட நேரமாக பேச்சுவார்த்தை நடத்தி தோல்வியில் முடிந்தது. பின்னர் மணமகன் வீட்டார் பகுதியில் காவல் துறையினரிடம் இது குறித்து புகார் அளித்தனர். மகனை திருமணம் செய்து கொள்வதாக பெண் வீட்டார் ஏமாற்றி தங்களிடம் இருந்து பரிசு பொருட்கள் மற்றும் நகைகளை வாங்கிக் கொண்டதாக புகார் தெரிவித்தனர். மேலும் இதனை திரும்ப தரவில்லை என்றும் கூறியிருக்கின்றனர்.
இது குறித்து விசாரணை செய்த காவல்துறை எஸ் எச் ஓ கிருஷ்ணா லால் மணமகள் வீட்டாரை அழைத்து கேட்டுள்ளனர். குற்றத்தை ஒத்துக் கொள்ளாத மணமகள் குடும்பத்தினர் தங்களுக்கு அவர்கள் கொடுத்த பரிசுகளில் எந்த நகையும் இல்லை ஆனால் கொடுத்த பரிசுகளை உடனடியாக திரும்ப கொடுத்து வருகிறோம் எனும் தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தை மூலம் இரு தரப்பிலும் சமரசம் செய்து வைத்ததாக காவல்துறை அதிகாரி கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
