“என் பென்சில் விலை அதிகமாயிடுச்சு, நான் சாப்புடுற மேகி விலை அதிகமாயிடுச்சு, அதுக்கெல்லாம் நீங்க தான் காரணம்” என மோடிக்கு கடிதம் எழுதிய 6 வயது சிறுமி

ரப்பர், பென்சில், மேகி போன்றவற்றிற்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால் விலையானது கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ஆறு வயது சிறுமி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில் தன்னிடம் ஐந்து ரூபாய் மட்டுமே இருக்கிறது ஆனால் மேகி விலை ஏழு ரூபாயாக அதிகரித்துள்ளதால் அந்த கடிதத்தை அவர் வேதனையுடன் எழுதியுள்ளார்.

கடந்த மாதம் 21ஆம் தேதி மத்திய அரசு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரியை உயர்த்தியது. பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் எல்லா பொருட்களுக்கும் ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக தயிர் வெண்ணெய் உள்ளிட்ட பொருள்களின் விளையும் உயர்ந்துள்ளது. மேலும் பென்சில், ஷார்ப்னர், ரப்பர் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இது போன்ற பள்ளி மாணவர்களுக்கான தேவையான பொருட்கள் இல்லாத நிலையில் நடப்பாண்டு முதல் ஜிஎஸ்டி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கும் ஒரு விஷயமாகும். இதனால் 20 முதல் 25 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஐந்து ரூபாய் கொடுக்கப்பட்ட பென்சில் ரப்பர் ஆகியவற்றின் விலை தற்போது இரண்டு முதல் மூன்று ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

“விக்னேஷ் சிவன் பார்க்க பிரபு தேவாவை போல் இருப்பதால் தான் நயன் அவரை காதலித்தார்” – புது ட்விஸ்ட் அடித்த சினிமா பிரபலம்

இதேபோல குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மேகி போன்ற பொருட்களுடைய விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் கண்ணோச் மாவட்டத்தை சேர்ந்த பிரீத்தி துபே என்ற சிறுமி பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் என் பெயர் கிருத்தி நான் ஒன்றாம் வகுப்பு படிக்கிறேன். மோடிஜி நீங்கள் மிகப்பெரிய விலைவாசி உயர்வுக்கு காரணமாய் இருக்கீங்க. ஏன் பென்சில் மற்றும் ரப்பர் ஆகியவற்றின் விலை உயர்வுக்கு மோடிஜி நீங்கள்தான் காரணம். நான் சாப்பிடும் மேகியின் விலை அதிகரித்துள்ளது அதற்கும் நீங்கள் தான் காரணம்.

இப்போது என் அம்மா பென்சில் கேட்டால் என்னை அடிக்கிறார். நான் என்ன செய்வது மற்ற குழந்தைகள் என் பென்சிலை திருடி விடுகிறார்கள். மேலும் மேகி வாங்க என்னிடம் ஐந்து ரூபாய் மட்டுமே உள்ளது. ஆனால் மேகியின் விலை 7 ரூபாயாக உயர்ந்து விட்டது என அந்த கடிதத்தில் உருக்கமாக எழுதியுள்ளார். பள்ளியில் பென்சிலை தொலைத்து விட்டு வேறு பென்சில் கேட்டதற்காக கிருத்திகை கண்டித்து அவரது தாய் அடித்துள்ளதாகவும் இதனால் ஏற்பட்ட கோபத்தில் பிரதமருக்கு சிறுமி கடிதம் எழுதி உள்ளதாகவும் அவரின் என் தந்தை தெரிவித்துள்ளார். சிறுமியின் இந்த கடிதம் தற்போது நாடு முழுவதும் வைரலாக பரவி வருகிறது.

Spread the love

Related Posts

365 நாளும் அவர் போட்டோ வரும் ஆனா அவருக்கு பப்ளிசிட்டி புடிக்காது, அட நம்புங்க பா …. அஜித்தை வெச்சி செய்த ப்ளூசட்டை

ப்ளூ சட்டை என்று அழைக்கப்படும் ப்ளூ சட்டை இளமாறன் அவர்கள், தனது யூடியூப் சேனலில் ரிவ்யூ

Watch Video | நடிகை ஸ்ருதி ஹாசன் ஜிம்-ல் ஒர்கவுட் செய்துகொண்டிருக்கும்போது அவரின் காதலன் செய்த வேலை …..

சுருதிஹாசன் செல்ஃபி எடுக்கும் போது பின்னால் தட்டிய காதலன் அதை இன்ஸ்டால் ஸ்டோரியில் பதிவிட்டு இருக்கும்

“நான் செய்தது தவறா ?” ஸ்விக்கி பாய்யை அடித்ததற்கு உண்மையான காரணம் என்னவென்று அவர் பக்க நியாயத்தை சொன்ன காவலர்

கோவையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்விக்கி டெலிவரி பாயை கன்னத்தில் அறைந்தற்காக காவலர் சதீஷை பணியிடை