Viral Video | ஹிந்து முறைப்படி மாலை மாட்டி திருமணம் செய்து கொள்ளும் கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல்லின் கல்யாண வீடியோ வைரல்

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் அதிரடி ஆட்டக்காரரான கிளன் மேக்ஸ்வெல் க்கு ஹிந்து முறைப்படி திருமணம் இந்தியாவில் இன்று நடைபெற்றது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 32 வயதான அதிரடி ஆட்டக்காரர் கிளன் மேக்ஸ்வெல் ஒரு முறை ஐபிஎல் ஆட்டத்திற்கு இந்தியாவிற்கு வருகை தரும்போது வினி ராமன் என்கிற தமிழ் சமூக பெண்ணிடம் காதல் வயப்பட்டு பின்பு நான்கு வருடம் இவர்கள் காதலித்து வந்தனர். அதற்குப் பிறகு வீட்டாரின் சம்மதத்துடன் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது.

அதன்பிறகு இருவரும் லிவ்விங் ரிலேஷன்ஷிப் முறையில் ஒரு வருடத்திற்கு மேலாக வாழ்க்கையை நடத்தி வந்தனர். இப்போது இவர்களின் திருமண தேதியும் குறிப்பிடப்பட்டு திருமணம் நடைபெற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்தது. பெண் வீட்டார் தமிழ் சமூகம் என்பதால் அவர்கள் தமிழில் பத்திரிகையை அடித்தனர். அந்த பத்திரிகையும் கொஞ்ச நாட்களுக்கு முன்பு வைரலாக ஷேர் ஆனது.

மேக்ஸ்வெல் கிறிஸ்டியன் என்பதால் கிறிஸ்டியன் முறைப்படியும் அவரது மனைவி வினி ராமன் இந்து என்பதால் இந்து முறைப்படியும் திருமணங்கள் நடைபெற்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது இந்த வீடியோவை கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் இவர் கல்யாணம் முடித்த கையோடு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு கிரிக்கெட் விளையாட வந்து சேருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றுதான் பெங்களூரு அணி 200 ரன்களுக்கு மேல் அடித்தும் தோல்வியைக் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related Posts

வரி ஒழுங்கா கட்டுங்க இளையராஜா… மத்திய அரசு 3 ஆவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது | இத்தனை கோடி வரி பாக்கியா ?

சென்னையில் உள்ள மத்திய அரசின் தேசிய புலனாய்வு துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் கடந்த மாதம்

இந்தியாவில் Free Fire தடை | ஒரே நாளில் 1600 கோடி டாலர்களை இழந்த சீன நிறுவனம்

பிரதமர் மோடியின் தலைமையிலான இந்திய அரசு சீனா அரசின் 54 செயலிகளை பிப்ரவரி 14ஆம் தேதி

Viral Video | டெல்லியில் கார் ஒன்று பைக் ரைடரை மோதி விட்டு செல்லும் பதைபதைக்கும் வீடியோ காட்சி வெளியாகி வைரல்

டெல்லியில் ஸ்கார்பியோ கார் ஒன்று டூவீலரை முட்டி முன்னேறி செல்லும் பதை பதைப்பான வீடியோ காட்சியை

x