இயக்குனரும் மற்றும் சிறந்த குணச்சித்திர நடிகருமான ஜி எம் குமார் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் பிரபு, பல்லவி, ராம்குமார் நடித்த அறுவடை நாள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதை தொடர்ந்து சத்யராஜ், ராதா நடித்த பிக்பாக்கெட், கார்த்திக், பல்லவி நடித்த இரும்பு பூக்கள், மோகன், பல்லவி நடித்த உருவம் ஆகிய படங்களை இயக்கினார்.

தொடர்ந்து படங்களை இயக்கியவர் கேப்டன் மகள், வெயில், மாயாண்டி குடும்பத்தார், அவன் இவன், தாரை தப்பட்டை , சரவணன் இருக்க பயமேன் உட்பட பல படங்களில் குணசத்திர வேடங்களில் தோன்றினார். அந்த வேடங்களில் நடித்து மக்களின் வரவேற்பையும் பெற்றார்.
இந்த நிலையில் இவருக்கு சில நாட்களாக உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சென்னை முகலிவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிப்பதாக கூறுயிருகின்றனர்.
