துபாய் பாலைவனத்தில் ஷேக் உடை அணிந்து சுற்றிவரும் ஜி பி முத்துவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பதவி வருகிறது.
தமிழக மக்களுக்கு எல்லோருக்கும் பரிச்சயமான ஒரு முகம் தான் ஜி பி முத்து. தன்னுடைய உடல் மொழியாலும் வாய்மொழியாலும் 6 முதல் 60 வரை ரசிகர்களை தனக்காக உருவாக்கினார் ஜி பி முத்து. இலை மறை காய் மறை ஜோக்குகளை போட்டு பேமஸான இவர் இதை வைத்து சினிமா படங்களிலும் நடித்தார். என்னதான் இவர் சினிமா படங்களில் நடித்தாலும் யூட்யூபில் இவர் போடும் வீடியோக்களுக்கு தான் ரசிகர்கள் அதிகம் என தெரிந்த இவர் பிறகு யூட்யூப் பக்கமே திரும்பினார்.

பல சர்ச்சைகளில் சிக்கி கோர்ட்டு கேஸ் வரையும் சென்று இருக்கிறார். இந்த நிலையில் ஜிபி முத்து அவர்கள் ஷேக் உடை அணிந்து அரபு பாலைவனத்தில் இருக்கும் அவருடைய ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். மேலும் தன் குழந்தைகளையும் மனைவியையும் விட்டுவிட்டு செல்வது மன வருத்தம் அளிப்பதாகவும் கூறியிருக்கிறார். சென்னை விமான நிலையத்துக்கு வந்த ஜிபி முத்து அங்கு அவர் டிக்கெட் வாங்குவது உட்பட எல்லாவற்றையும் வீடியோவாக எடுத்திருக்கிறார். தற்போது இவரின் பாலைவன வீடியோ வைரலாகி வருகிறது.