பிஹார் மாநிலம் நவடாவில் திருமணம் நிச்சயக்கப்பட்ட இருந்த வாலிபர் திடீரென மணப்பெண்ணை கண்டதும் திருமணம் வேண்டாம் எனக்கூறி சாலையில் ஓடிய நிலையில் அவரை மணப்பெண்ணும் அவருடைய குடும்பத்தினரும் துரத்திச் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகியுள்ளது.
அந்தப் பெண் மார்க்கெட்டுக்கு தனது பெற்றோருடன் சென்றபோது அங்கே இவரை கண்டிருக்கிறார். அப்போது மகள் “அம்மா எனக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளை தான இவர் இங்க இருக்காரு பாருங்க” என கூறியுள்ளார். இவர்களை கண்டதும் அவர் ஒரே ஓட்டம் எடுத்துள்ளார். இவரை ஓடிப் பிடித்த அந்த மணப்பெண் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.
அந்தப் பெண் அவரை பிடிக்கும் போது அவரின் கைகளை தட்டிவிட்டு இவர் ஓடும் காட்சிகளும் அதில் வருகிறது. அந்தப் பெண்ணுடைய வீட்டார் கல்யாணத்திற்காக நாங்கள் அவருக்கு 50 ஆயிரம் பணமும் ஒரு பைக்கும் கொடுத்தோம். அப்போது அவரின் வீட்டிலிருந்து கல்யாண தேதியை கொஞ்சம் மாற்றி வையுங்கள் என கூறினார்கள். நாங்களும் அதை மாற்றி வைத்தோம். ஆனால் தற்போது இவர்கள் கல்யாணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனக் கூறினார்கள்.

உடனே அந்த இடத்திற்கு விரைந்த போலீசார் இரு தரப்பினரையும் விசாரித்து இவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தனர். தற்போது இவர்களின் திருமணம் போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரில் உள்ள ஒரு சின்ன கோயிலில் நடைபெற்றிருக்கிறது. மணப்பெண்ணை கண்டதும் மணமகன் ஓடிய இந்த சம்பவம் அங்கிருந்த பலருக்கு அதிர்ச்சியோடு சேர்த்து வியப்பையும் கொடுத்திருக்கிறது.
एक शादी ऐसा भी
— Exclusive Post (@xclusivepost) August 28, 2022
जब शादी करने से भाग रहा था लड़का, तब लड़की ने उसे खुद पकड़कर रचाई शादी
मामला #बिहार के #नवादा का है। लड़की ने कहा कि पैसा और बाइक लेकर शादी करने से भाग रहा था लड़का#ExclusivePost#xclusivepost pic.twitter.com/LSpch8Sp5a