சென்னையில் உள்ள மத்திய அரசின் தேசிய புலனாய்வு துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் கடந்த மாதம் 8 ஆம் தேதி இளையராஜாவுக்கு அங்கிருந்து சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில் சேவை வரி ஏய்ப்பு தடைச் சட்டத்தின் படி கடந்த மார்ச் 10ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆஜராகா வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. அவர் வரும்போது தன் கையில் வைத்திருக்கும் ஆதாரங்களை எடுத்து வர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
நடிகை சாந்தினியிடம் மார்பகத்தின் சைஸ் கேட்ட ரசிகர், நடிகை கொடுத்த ரிப்ளை என்ன ?

அவர் ஆஜராகாததால் இதைத்தொடர்ந்து மார்ச் 21ஆம் தேதி மீண்டும் இளையராஜாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. மீண்டும் அவர் அவருடைய போக்கை கையில் எடுத்ததால் மார்ச் 28ஆம் தேதி காலை 11 மணிக்கு ஜிஎஸ்டி புலனாய்வு துறை தலைமை இயக்குனர் சென்னை மண்டல அலுவலகத்தில் அஜராக வேண்டும் என இளையராஜாவுக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. அதையும் அவர் பெரிது படுத்தாதளால், மூன்றாவது முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி ஆணையரகம் தெரிவித்துள்ளது.

இளையராஜா அவர்கள் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திடம் வரியோட சேர்த்து கட்டணத்தை பெற்றுள்ளார். ஆனால் அந்த வரியை மட்டும் அவர் திருப்பி செலுத்தவில்லை எனக்குற்றம்சாட்டி 1.87 கோடி வரி பாக்கியை செலுத்த சொல்லி இருக்கிறது ஜிஎஸ்டி ஆணையரகம்.