குஜராத்தில் பெண் ஒருவர் தன்னையே திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறார்.
குஜராத் மாநிலம் வதோதராவில் சேர்ந்த ஷமா பிந்துவுக்கு வரும் ஜூன் 14ஆம் தேதி கல்யாண நடை பெற இருக்கிறது. ஒரு கல்யாணத்திற்கு என்னென்ன தேவையோ அது எல்லாமே அமைந்திருக்கிறது. திருமண மேடை, கல்யாண மண்டபம், இசைநிகழ்ச்சி, விருந்து, மணமகள் ஆடை, ஆனால் மணமகன் மட்டுமில்லை.

மணமகன் இல்லாமல் மற்ற எல்லாவற்றையும் வைத்து இந்த பெண்மணியின் திருமணம் நடக்கவிருக்கிறது. குஜராத்தில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுதான் முதல்முறை. இதுகுறித்து அந்த பெண் பேசியபோது கூறியதாவது:- “எனக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை, ஆனால் மணப்பெண்ணாக இருப்பது பிடித்து இருக்கிறது. அதனால்தான் நான் மற்றவரை திருமணம் செய்யாமல் என்னைத் நானே திருமணம் செய்து கொள்கிறேன். முதலில் நம்மை நாமே ரசிக்க வேண்டும் அதனை முன்வைத்து தான் நான் இந்த விஷயத்தை கையில் எடுத்தேன். நான் மற்றவருக்கு இதன் மூலம் ஒரு உதாரணமாக இருப்பேன் என நினைக்கிறேன். இதனை என் பெற்றோர்களும் எந்த வித எதிப்பும் இன்றி அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
