“ப்ளூ சட்டை மாறனை இறங்கி செய்யணும் போல இருக்கு” என ஓப்பனாக நேர்காணலில் பேசி பரபரப்பை கிளப்பி இருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன்.
வெந்து கனிந்தது காடு படம் வெளியானதிலிருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வசூலில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இருந்தாலும் இந்த படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை அழித்து வருகின்றனர். அதில் முக்கிய பங்கு ப்ளூ சட்டை மாறனுக்கு தான். இந்த வெந்து தணிந்தது காடு படம் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களின் இயக்கத்தில் சென்ற வாரம் திரைக்கு வந்தது. இந்த படத்தை ப்ளூ சட்டை மாறன் மிகவும் கழுவி ஊற்றி இருக்கிறார்.

இதனால் இதை பொறுத்துக் கொள்ள முடியாத கௌதம் மேனன் அவர்கள் இதைப் பற்றி ஒரு நேர்காணலில் பேசி இருக்கிறார் அப்போது :- “எனக்கு அவருடைய யூடியூப் சேனலில் ரிவ்யூ பார்க்க செல்லும் போது செமையான கோபம் வரும். அடக்கிக் கொள்ள முடியாத அளவிற்கு ஒரு வெறுப்பு வரும். நான் அவருடைய திருச்சிற்றம்பலம் ரிவியூவும் பார்த்தேன். நான் அதை முதலில் பார்க்கவில்லை, படம் எல்லோரும் நன்றாக வந்திருக்கிறது என சொன்ன உடனேயே அவரது ரிவ்யூவை பார்த்தேன். முதலில் மொக்கை படம் என்பது போல் ரிவ்யூ சொல்லிவிட்டு. பிறகு ஏதோ ஒரு முறை பார்க்கலாம் என கூறுவார்.
இதையெல்லாம் பார்த்து எனக்கு மிகவும் கடுப்பாகிவிட்டது. நான் வேறு ஒரு சிந்தனையிலும் போய்விட்டேன். நீங்கள் கேட்பதற்காக அதை சொல்கிறேன். ஏதாவது இறங்கி செய்து விடலாமா என்ற அளவிற்கு எனக்கு யோசனை வந்துவிட்டது” என இப்படியாக ப்ளூ சட்டை மாறன் மீது உள்ள கோபத்தை வெளிப்படையாக நேர்காணலில் காட்டியிருக்கிறார் கௌதம். கவுதம் மேனனின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.
ப்ளூ சட்டை மாறனை @tamiltalkies
— Name (@YourNanban) September 20, 2022
இறங்கி செய்ய போகும் @menongautham pic.twitter.com/NUJUa7SZaH
