“மதுரை ஆதீனத்தை மிரட்டினால், திமுகவில் ஒருத்தர் கூட இருக்க மாட்டீர்கள்” மேடையில் திமுகவுக்கு பயத்தை காட்டிய எச்.ராஜா

மதுரை ஆதீனத்தை திமுக அரசு மிரட்டி வருகிறது. இந்தப் போக்கு தொடர்ந்தால் திமுகவில் ஒருத்தர் கூட இருக்கமாட்டார்கள் என எச்சரித்துள்ளார் எச்ச ராஜா.

பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து எட்டு ஆண்டுகள் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த எட்டு ஆண்டுகள் சாதனை விளக்க மாவட்டம் தோறும் தமிழகத்தில் பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அண்ணாமலையும் பல மாவட்டங்களுக்கு சென்று பொதுக்கூட்டங்களில் கலந்து பேசி வருகிறார். மேலும் பாஜகவை சேர்ந்த பல மூத்த உறுப்பினர்களும் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர். அதன் அடிப்படையில் தற்போது தேனி பொதுக்கூட்டத்தில் பேசிய எச்ச ராஜா அவர்கள் “தமிழகத்தில் இந்து அறநிலை துறை அடித்து கொள்ளையடித்த பணம் மட்டும் இதுவரை 10 லட்சம் கோடி” என பேசி உள்ளார்.

“முதல்வர் ஸ்டாலின் உயிருக்கு ஆபத்து, காவல்துறை அவரை கண்காணிக்க வேண்டும்” அதிர்ச்சியளித்த சுப.வீரபாண்டியன்

மேலும் பேசிய அவர் “மதுரை ஆதீனம் நல்ல பற்றுள்ள மனிதர், அவரை திமுக அரசு மிரட்டுகிறது. ஆழ்வார்களில் ஒருவரான திருநாவுக்கரசு உருவாக்கப்பட்ட பீடாதிபதியை நீங்கள் மிரட்டுவீர்களா ? அவரை தொட்டால் திமுகவில் ஒருவர் கூட மிஞ்ச முடியாது. எல்லோரும் பிஜேபிக்கு வந்துவிடுவார்கள் கோயில்களிலிருந்து அரசை விரட்டியடிக்க வேண்டும். ஆதீனம் தலைமையில் எல்லோரும் ஒன்று சேர்வோம். தமிழக மக்கள் வீதியில் வந்து நின்று திராவிட முன்னேற்ற கழக அரசை தூக்கி எறிவார்கள். அந்த நிலை விரைவில் தமிழகத்தில் வரத்தான் போகிறது.

தமிழ்நாட்டிற்கு திமுக தேவையே கிடையாது தமிழை வளர்க்கிறோம் என மேடைகளில் பேசுவார்கள். ஆனால் தமிழர் விரோத கட்சி திமுக. நமது தாய்மொழி தமிழை சனியன் என்று பேசிய பெரியாரின் வழியில் வந்ததுதான் இந்த திமுக. அதனால் இந்த கூட்டத்தை ஒரு போதும் மக்கள் ஏற்கமாட்டார்கள். எப்போதும் திமுக நடக்கப்போகும் ஒன்றை முன்கூட்டியே சொல்வது. ஏனென்றால் அது எதிர்காலத்தில் நடக்கப் போகிறது என்பது அவர்களுக்கே தெரியும். அது போன்று தான் கச்சத்தீவு பிரச்சினை. எழுதி வைத்துக்கொள்ளுங்கள் 2031 இல் தமிழகத்தில் தமிழர்கள் சிறுபான்மை இனமாக இருப்பார்கள்” என்று மிகவும் திமுகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் பேசியுள்ளார்.

Spread the love

Related Posts

“தனி ஒரு மனிதராக நான் அண்ணாமலையை பாராட்டுகிறேன்” – அமைச்சர் துரைமுருகன் | இது லிஸ்ட்லியே இல்லையே

தனி ஒரு மனிதராக நான் அண்ணாமலையை பாராட்டுகிறேன் எனக் கூறியிருக்கிறார் திமுக அமைச்சர் துரைமுருகன். திமுக

EB- ஆதார் எண் இணைப்பு – வெளியான முக்கிய அறிவிப்பு

ஒன்றிய அரசின் ஒப்புதலுடன் நடைபெறும், தமிழ்நாட்டிலுள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின்

தீண்ட தகாத சாதி எது என்று கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை

தீண்ட தகாத சாதி எது என்று மாணவர்களின் வினாத்தாளில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள ஒரு